;
Athirady Tamil News

யாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், “காடையரின்* அட்டகாசமும்… (படங்கள்)

0

யாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், “காடையரின்* அட்டகாசமும்… (படங்கள்)

ஓருவித அரசியல் அறிவற்ற கூட்டத்தை தன்னகத்தே வைத்துள்ள “சுவிஸ் புலிகள்” எனக் கூறிக் கொள்ளும், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆனது இச்சந்திப்பை குழப்புவதற்கு ஆட்களை திரட்டி குழப்பத்தினை ஏற்படுத்தியது.

சுவிற்சர்லாந்து போன்ற ஓர் ஜனநாயக நாட்டில் அனுமதி பெறாத ஓர் ஆர்பாட்டம் சாத்தியமாகிட்டு, இதே வகைப்பட்ட ஜனநாயகத்தினை இக்கூட்டத்திடமிருந்து நாம் எதிர்பார்க்க முடியுமா ?

கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களிடம் இவர்கள் பாவித்த வார்த்தைகளே, இவர்களின் அறிவின் தரத்தினை எடுத்துரைத்துள்ளது.
**தமிழனுக்கு பிறந்தனியா?
**குண்டி கழுவ வந்தனியா?
**உன்னுடைய படம் விரைவில் வீட்டில் தொங்கும்…
இன்னமும் பல தூசண வார்த்தைகள்…..

இவர்கள் கூறும் வகையில் தமிழனாக பிறந்ததினால் தான் உங்கள் தலைமைகளாலும், உங்களாலும் கைவிடப்பட்ட போராளிகளிற்கே நாம் “தண்ணீர்” என்ற அமைப்பு மூலம் வாழ்வாதாரங்களை வழங்க முன்வந்துள்ளோம்.

தண்ணீர் வழங்குவதற்கு அந்நாட்டில் எந்த வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது என்பதனையும், எமது திட்டங்களை இலகுவாக நடைமுறைப்படுத்த இருக்கும் சட்டசிக்கல்களை அலசுவதற்காகவே நாம் அங்கு சென்றிருந்தோம்.

புல்வேறுபட்ட சக்திகளை சந்திப்பதும், எமது நியாயங்களை எடுத்துரைப்பதற்கும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முழு சுதந்திரம் உள்ளது. எமது கருத்துக்களிற்கு எதிராக சிந்திப்பவர்கள் எம்மை விமர்சிப்பதற்கும் உரிமையுள்ளது.

உங்கள் தலைமைகள் இலங்கை பேரினவாத சக்திகளிடம் கூடிக்குலாவி மக்களிடம் இருந்து போராட்டத்திற்கென சேகரிக்கப்பட்ட நிதிகளை கொண்டு இலங்கையில் எஸ்டேட்டுகளையும், விடுதிகளையும் வாங்கிய போது ஏன் நீங்கள் கிளர்ந்தெழவில்லை?

உங்கள் தலைமைகளால் சேகரித்த நிதிகள் எங்கு சென்று முடங்கின என்ற கேள்விகளை ஏன நீங்கள் கேட்க தவறினீர்கள்?

இந்த வருடமும் “மாவீரர்கள்” பெயர் சொல்லி நிதி சேகரிப்பு நடைபெறுகின்றது. உங்கள் தலைமைகள் உங்கள் உணர்வுகளை துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்பதை உங்களால் உணர முடியாதுள்ளது?

முள்ளிவாய்க்காளுடன் புலித்தலைமை அழித்தொழிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்று இவர்கள் உங்கள் முன்னிலையில் அடையாளப்படுத்துவது நியாயம் என்று கருதுகின்றீர்களா?

இன்றும் வன்னியில் போராட்டத்தில் ஈடுபட்ட தலைமைப்போராளிகள் புனர்வாழ்வு பெற்று இன்னமும் வறுமையை மட்டுமேயே அன்றாடம் சந்தித்து வருகின்றனர்.

நீங்கள் தொலைக்காட்சியில் போராளிகள் சிந்தும் இரத்தினை பார்த்து புள்ளத்தரித்து ஆதரவாளராகியவர்கள், எவ்வாறு புலிகளின் ஏகபிரதிநிதிகள் ஆகமுடியும்?

நீங்கள் விரும்பி பார்த்த விடுதலைப்புலிகளின் போராட்டம் தோல்வி கண்ட பின்பு இன்னுமொரு தடவை இந்த இரத்தம் சிந்தும் காட்சியை பார்ப்போம் என ஏங்குபவர்களால், அந்த போராளிகளின வலிகளையும் வடுக்களையும் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்?

எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பது அறியாததின் விளைவு போரட்டத்தின் தோல்விக்கு முக்கிய காரணமானது. புங்குடுதீவு ஓன்றிய பெரும்பான்மை அங்கத்தவர்கள் புலிகளிற்கு ஆதரவானவர்களே. அவர்கள் தமது கிராம அபிவிருத்திக்கு என்ன செய்லாம்? என்பதனையே வடமாநில ஆளுநர் இடம் ஆலோசித்தனர். இன்றைய ஆர்பாட்டம் மூலம் அவர்களை நீங்கள் எதிர்நிலைக்கு தள்ளி உள்ளீர்கள்..
சுந்திப்பின் போது.பலர் இலங்கை அரசின் கபடத்தன்மையையும் அம்பலப்படுத்தினர், விமர்சித்தனர்.

நீங்கள் நாடுகளில் வசதியாக வாழ்ந்து கொண்டு இலங்கைக்கு சுற்றுலாக்களுக்கு சென்று வந்துவிட்டு ஆளுநரை சந்திப்பது தேசத்துரோகம் என்று கூற எப்படி உங்கள் மனச்சாட்சி இடம் தருகின்றது?

போராட்டத்தின் போது ஆயத விற்பனை கொள்வனவுகளில் ஈடுபட்ட உங்கள் தலைமைகளும் இலங்கை அரசின் அரசியல்வாதிகளும் தமது வயிற்றுக்களை வளர்த்த வராலாறுகளை நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

அவ்வாறு வயிறு வளர்த்த உங்கள் தலைமைதரப்பும் பல அரசியல்வாதிகளும் மீண்டும் ஓர் யுத்தம் வராதா? என யாகம் செய்து வருகின்றனர்.

STCC உண்மையான உங்கள் தலைமையா? என்பதை மீள் பரிசீலனை செய்யுங்கள்…!!!

உங்களால் செய்யப்படும் போரட்டங்கள் அங்கு வாழும் மக்களிற்கு விடிவினை கொண்டு வருமா என சிந்தியுங்கள்..!

ஏன் விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என்பதனை சிந்தியுங்கள்..!

மற்றவர்கள் மீது தவறுகளை சுமத்தாது, எங்கு புலிகள் தரப்பில் தவறு நடந்தது என்பதனை கண்டறியுங்கள்..!

தமிழ் மொழிக் கல்வி, கோவில்களின் நிதியில் ஆதிக்கம், கலை கலாச்சார (நாட்டிய மயில், இசைக்குயில்) ஏன் இவற்றை உங்கள் தலைமைகள் தம்மகத்தே வைத்து கொள்ள,வேண்டுமென விரும்புகின்றது?

ஆளுநர் சந்திப்பினை குழப்ப உங்களால் செய்யப்பட்ட போராட்டம் வெற்றி பெற்றதா? என்றால்.. “இல்லை”. ஏற்பாடு செய்த நிகழ்வு மிக வெற்றிகரமாக வேறு ஓர் இடத்தில் நடாத்தபட்டது. இதில் நீங்கள் சாதித்தது என்ன?

போராட்டங்கள் நடாத்தும் போது தயவுசெய்து உங்கள் திருவாய்களை கழுவிவிட்டு போராட்டம் நடாத்துங்கள்.. உங்கள் வாய்களில் இருந்து வரும் தூசணங்கள் மூலம் பெண்களை இழிவுபடுத்துகின்றீர்கள் என்பதை உங்களால் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்…!!

–சுவிஸ் “தண்ணீர்” அமைப்பு விடுத்துள்ள அறிக்கை இது.. புகைப்பட உதவி.. கருணாநிதி பேர்ண்..

(சுவிஸில் நடைபெற்ற வடமாகாண ஆளுனருடனான சந்திப்பின் போது.. ஆளுநர் ஆற்றிய உரை, சந்திப்பின் விபரமான செய்திகள் யாவும் படங்கள், வீடியோக்களுடன் விரைவில் பிரசுரமாகும்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − five =

*