;
Athirady Tamil News

“சுவிஸ் ஒன்றியத்தின்” வேண்டுகோளை ஏற்று; புங்குடுதீவில் வீதிவிளக்கு பொருத்தும் பணிகளை, ஆளுநர் இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.!! (படங்கள் &வீடியோ)

0

ஆளுநரின் ஐரோப்பிய விஜயத்தின் போது “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்” விடுத்த வேண்டுகோளின் பேரில், புங்குதீவில் இருண்ட பகுதிகளுக்கான வீதிவிளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக மடத்துவெளி, ஊரதீவு முதல் குறிச்சிக்காடு வரையான பகுதிக்கு வீதி விளக்கு பொருத்தும் பணிகளை ஆளுநர் இன்று (05.12.2018) ஆரம்பித்து வைத்துள்ளார்.

ஆளுநர் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தின் போது “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் தலைவர்” சொக்கலிங்கம் ரஞ்சன், தீவகத்தின் பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளுக்கான குளங்கள் புனரமைக்கப்படல் வேண்டும், மக்களின் பாதுகாப்பு கருதி வீதி விளக்குகள் பொருத்தப்படல் வேண்டும், தீவகத்தில் கல்வித் தேவைக்காக ஆசிரியர்களின் ஆளணியினை அதிகரிக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தார்.

அது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கூட்டத்தினை இன்றயதினம் கூட்டிய ஆளுநர் வீதி விளக்கு பொருத்தும் பணிகளை ஆரம்பித்ததோடு புங்குடுதீவில் வெளிச்சவீட்டிற்கு செல்லும் பாதையினை செப்பனிடும் பணியினையும் ஆரம்பித்து வைத்தார்.

நாகதீவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் புங்குடுதீவு வெளிச்சவீட்டினையும் பார்வையிடும் வகையில் வீதியினை செப்பனிட்டு அப்பகுதியினை அழகுபடுத்தும் பணியினையும் ஆரம்பித்து வைத்தார்.

புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தினை அண்மித்த கடற்கரை பகுதியினை அழகுபடுத்துவதற்கான மரங்களை நாட்டி வைத்த ஆளுநர் தீவுப் பகுதிக்கான நுளைவாயில் அமைந்துள்ள பகுதியில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் பிள்ளையார், புத்தர், மாதா சொரூபங்களையும் ஒரே இடத்தில் பிரதிஸ்டை செய்யும் பணியினையும் பார்வையிட்டார்.

தகவல் & படங்கள்.. “அதிரடி” இணையத்துக்காக, வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு…

DAN NEWS

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதிகளுக்கு வீதி விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன………….{தக்}

Gepostet von DAN News am Donnerstag, 6. Dezember 2018

DAN NEWS

புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதியை திரட்டுவதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் அரச நிதியில்லாமல் அபிவிருத்தி அடையும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்………….{ம}

Gepostet von DAN News am Donnerstag, 6. Dezember 2018

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

ஆளுநர் றெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் தீவக அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்!!(படங்கள்)

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின், “காற்றுவழிக் கிராமம் 2018″… (அறிவித்தல்)

வடமாகாண ஆளுநரின் “சுவிஸ் சந்திப்பில்” உரையாடியது என்ன? (விரிவான தகவலுடன் படங்கள், வீடியோக்கள்)

சுவிஸில் வடமாகாண ஆளுநர்: உண்மையில் நடந்தது என்ன? “தன்னிலை விளக்கம் தரும்” சுவிஸ்ரஞ்சன்..! (வீடியோ வடிவில்)

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + 5 =

*