;
Athirady Tamil News

புங்குடுதீவு மடத்துவெளி முக்கிய “பிரதான வீதிக்கு”; மின்விளக்கு பொருத்திய “சுவிஸ் ஒன்றியம்” (ஆதார படங்களுடன்)

0

புங்குடுதீவு மடத்துவெளி முக்கிய பிரதான வீதிக்கு மின்விளக்கு பொருத்திய “சுவிஸ் ஒன்றியம்” (ஆதார படங்களுடன்)

புங்குடுதீவு மடத்துவெளி முகப்பில் (புங்குடுதீவு ஆரம்பமான மடத்துத்துறையில்) உள்ள பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக, வடமாகாண ஆளுநரினால் ஆரம்பிக்கப்பட்ட “மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை”, இருவாரத்துக்கு முன்னர் ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களினால் வயலூர் முருகன் ஆலயம் தாண்டி, கமலாம்பிகை வித்தியாலம் வரை மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை தொடரப்பட்டு உள்ளது.

ஆளுநர் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தின் போது “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் தலைவர்” சொக்கலிங்கம் ரஞ்சன், தீவகத்தின் பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளுக்கான குளங்கள் புனரமைக்கப்படல் வேண்டும், மக்களின் பாதுகாப்பு கருதி வீதி விளக்குகள் பொருத்தப்படல் வேண்டும், தீவகத்தில் கல்வித் தேவைக்காக ஆசிரியர்களின் ஆளணியினை அதிகரிக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தார்.

அது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கூட்டத்தினை மூன்றுவாரத்துக்கு முன்னர் (05.12) வேலணை பிரதேச செயலகத்தில் கூட்டிய ஆளுநர், அன்றையதினமே வீதி விளக்கு பொருத்தும் பணிகளை புங்குடுதீவு மடத்துவெளி முகப்புப் பகுதியில் ஆரம்பித்து வைத்தார்.

இதன் அடுத்தகட்டமாக அப்பகுதிக்கு விஜயம் செய்த வடமாகாண ஆளுநரின் செயலாளர் திரு.இளங்கோவன் அவர்களின் மேற்பார்வையில்,  “சுவிஸ் ஓன்றியத்தின்” சார்பில், “மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை” தொடரப்பட்டு, வயலூர் முருகன் ஆலயம் தாண்டி, கமலாம்பிகை வித்தியாலயம் வரை மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் பொறுத்தப்பட்ட மின்விளக்கானது, அதிசக்தி வாய்ந்த தானியங்கி (சென்சார்) மின்விளக்கு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி மடத்துவெளி முக்கிய வீதிக்கான “மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைக்கான, மின்விளக்கு செலவுகளை” “மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய” சுவிஸ் நிர்வாக சபை சார்பாக, “மடத்துவெளி, ஊரதீவு” மக்கள் சிலரிடம் இருந்து பெற்றுத் தருவதாகவும், இதனை “சுவிஸ் ஒன்றியம்” செய்து தர வேண்டுமெனவும் ஆளுநர் முன்னிலையிலேயே கோரிக்கை வைத்து, பொறுப்பேற்றுக் கொண்ட திரு.சண்முகம் (சூரிச்), திரு.கைலாசநாதன் (குழந்தை), திரு.சௌந்தரராஜன் ஆகியோர் அதுக்குரிய குறிப்பிட்ட நிதியையும் உடனடியாக தந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..

இந்த புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதிக்கு “மின்விளக்கு பொருத்தும்” நடவடிக்கை குறித்து, வடமாகாண ஆளுநரின் செயலாளரும், புங்குடுதீவு “மண்ணின் மைந்தருமான” திரு.இலடசுமணன் இளங்கோவன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, “மடத்துவெளி முகப்பில் இருந்து, கமலாம்பிகை வித்தியாலயம் வரை” மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய சுவிஸ் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, “புங்குடுதீவு சுவிஸ் ஓன்றியத்தின்” ஏற்பாட்டில், செய்து முடித்து உள்ளோம். “சுவிஸ் ஓன்றியத்தின்” புங்குடுதீவெங்கும் “மின்விளக்கு பொருத்தும்” நடவடிக்கை அடுத்த வாரமளவில் மீண்டும் ஆரம்பமாகி நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை “உண்மைக்கு புறம்பான செய்திகளை” பரப்பி, மேற்படி நடவடிக்கையை குழப்பும் நோக்கில், சுவிஸ் ஒன்றிய நடவடிக்கைக்கு உரிமை கோருபவர்களின் “கபடத்தனத்தை” அம்பலப்படுத்தும் நோக்கில், செயற்படும் சிலருக்காக, அனைத்து ஆதாரங்களையும் பகிரங்கத்தில் வெளிக்கொண்டு வந்துள்ளோம்.

இதேவேளை புங்குடுதீவெங்கும் “மின்விளக்கு பொருத்தும்” நடவடிக்கையை, மீண்டும் அடுத்த வாரத்தில் இருந்து “சுவிஸ் ஒன்றியத்தால்” ஆரம்பிக்க உள்ளோம்.. இதன் முதற்கட்டமாக, புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் உள்ள “நண்பர்கள் சனசமூக நிலையத்தின்” மைதானம் அமைந்துள்ள பகுதியான புங்குடுதீவு நான்காம் வட்டாரமான இறுப்பிட்டி பகுதியின் மானாவெள்ளை வீதி (அடைகாத்தகுளம்) மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கையை, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்கொள்ள உள்ளோம். சுமார் 50குடும்பங்கள் பயன்படுத்தும் வீதியான, இதுக்குரிய நிதியை அப்பிரதேச “புலம்பெயர் உறவுகள்” தருவார்கள் எனும் நம்பிக்கையில்.. (இதுக்கு உறுதுணையாக இருப்பவர்களின் விபரம் உட்பட அனைத்து செய்திகளும் விரைவில் தரப்படும்.)

“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.

26.12.2018

DAN NEWS

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதிகளுக்கு வீதி விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன………….{தக்}

Gepostet von DAN News am Donnerstag, 6. Dezember 2018

DAN NEWS

புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதியை திரட்டுவதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் அரச நிதியில்லாமல் அபிவிருத்தி அடையும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்………….{ம}

Gepostet von DAN News am Donnerstag, 6. Dezember 2018

 

 

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், மடத்துவெளி முகப்பில் இருந்து தொடரும் “மின்விளக்குப் பொருத்தும்” நடவடிக்கைகள்… (படங்கள் & வீடியோ)

“சுவிஸ் ஒன்றியத்தின்” வேண்டுகோளை ஏற்று; புங்குடுதீவில் வீதிவிளக்கு பொருத்தும் பணிகளை, ஆளுநர் இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.!! (படங்கள் &வீடியோ)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், புங்குடுதீவு “காந்தி” தையல் பயிற்சிக்கான உதவி..! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*