;
Athirady Tamil News

“விழா தொடர்பான”, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” நேற்றைய கலந்துரையாடல் கூட்டம்..! (படங்கள்)

0

“விழா தொடர்பான”, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” நேற்றைய கலந்துரையாடல் கூட்டம்..! (படங்கள்)

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான “கலந்துரையாடல் கூட்டம்” ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் தலைமையில், நேற்று (12.05.2018) மாலை 05.00 க்கு (17.00) புர்கடோர்ப் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் “தவிர்க்க முடியாத காரணங்களினால்” கலந்து கொள்ள முடியவில்லையென திரு.பன்னீர், திரு.பிரேம், திரு.பிரதீபன், திரு.இலக்ஷ்மணன் ஆகியோர் அறியத் தந்திருந்தனர். அதேபோன்று திரு.சுரேஷ் “நாடக ஒத்திகை” காரணமாக நாடகக் குழுவினர் சமூகம் தர முடியவில்லையென அறிய தந்திருந்தனர்.

*** செயலாளர், பொருளாளரின் அறிக்கைகள்…

முதலில் கடந்த கூட்டறிக்கை செயலாளரினால் வாசிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து “ஒன்றிய பொருளாளர்” திரு.அ.கைலாசநாதன் (குழந்தை) அவர்களினால் இவ்வருட கணக்கறிக்கை வாசிக்கப்பட்டதுடன், கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவராலும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கேரதீவு மாணவர்களின் வாகன வசதி..

அண்மையில் இலங்கை சென்று வந்த, ஒன்றிய ஆலோசனைச்சபை உறுப்பினர் திரு.நிமலன், “கேரதீவு பகுதியில் இருந்து கமலாம்பிகை வித்தியாலத்துக்கு கல்வி பயில” செல்லும் மாணவர்கள், வாகன வசதி இல்லாமல் மிகவும் கஸ்ரப்படுவதாகவும், ஏழ்மை நிலையில் உள்ள அம்மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, ஒன்றியத்தின் சார்பில் வாகன வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனும்” கோரிக்கையை முன்வைத்தார். இதுகுறித்த வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து “இக்கோரிக்கையினையை அப்பிரதேச மக்கள் கையெழுத்துடன், எழுத்து மூலம் முன்வைக்கும் பட்சத்தில், ஒன்றியத்தால் பரிசீலிக்கப்படும் எனவும்” ஒன்றியத் தலைவர் திரு.சொ.ரஞ்சன் அவர்களால் பதிலளிக்கப்பட்டது.

*** விழா தொடர்பான தீர்மானங்கள் ***

“வேரும் விழுதும் 2019” விழா நிகழ்வுக்கான குழுவானது திரு.சுரேஷ் தலைமையில் திரு.இலக்சுமணன், திரு.நிமலன், திரு.ரமணன் ஆகியோருடன் “ஒன்றியத் தலைவர்” திரு.ரஞ்சன் மேற்பார்வையாளராகவும் இணைக்கப்பட்டு “விழாக் குழு” அமைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே. இது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தனிப்பட்ட ரீதியில் அனைவருக்கும் தெரிவிப்பது எனவும், அதனைக் கிடைக்காதவர்கள் ஒன்றியத் தலைவருடன் தொடர்பு கொண்டு உரையாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்…

*** “வேரும் விழுதும்” கலைமாலை விழா நிகழ்வுக்கான உதவி..**

இதேவேளை மேற்படி விழாவை நடத்துவத்துக்கான பங்களிப்பையும் நல்லுள்ளம் கொண்ட புங்குடுதீவு பெருந்தகைகளிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். ஒன்றிய நிதியானது புங்குடுதீவில் உள்ள மக்களினதும், புங்குடுதீவினதும் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துவதென நாம் கொண்ட கொள்கையின் காரணமாக, மேற்படி விழாவை உங்களின் பங்களிப்பிலேயே நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை என்பதை நீங்கள் அறிவீர்கள். வழமை போல் எமக்கு உதவி புரியும் நல்லுள்ளங்களுடன் இணைந்து ஏனையோரும் உதவி புரிய வேண்டுமென தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

(தொடர்புக்கு.. திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (தலைவர்) -077.9485214, திரு,அ.கைலாசநாதன் (குழந்தை -பொருளாளர்) -079.9373289, ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.) நன்றி..

“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
13.05.2019

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × four =

*