;
Athirady Tamil News

மறைந்த “புளொட்” தளபதி தோழர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, தொடரும் பல்வேறுபட்ட சமூகநலப் பங்களிப்பு..!! (படங்கள் & வீடியோ)

0

மறைந்த “புளொட்” தளபதி தோழர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, தொடரும் பல்வேறுபட்ட சமூகநலப் பங்களிப்பு..!! (படங்கள் & வீடியோ)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம் மாணிக்கம்ராஜன் (மாணிக்கதாசன்), மற்றும் அவருடன் இணைந்து “விடுதலைக்கு விதையான” திரு.தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ), திரு முருகேசு குணரட்ணம் (வினோ) ஆகியோரின் இருபதாவது நினைவுதினம் புளொட் மற்றும் அதன் அரசியல் பிரிவான டிபிஎல்எப் தோழர்கள், ஆதரவாளர்களினால் உலகெங்கும் நினைவு கூறப்படுகிறது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவரும், இராணுவத் தளபதியுமான தோழர் மாணிக்கதாசன் மற்றும் அவருடன் மரணித்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் 20ஆம் ஆண்டு நினைவு நாளில்; யுத்தத்தாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு நிலையை கருத்திற் கொண்டு பல்வேறு சமூக நலன்சார் உதவிகள் நேற்று (02.09.2019) “புளொட் சுவிஸ் கிளையால்” வழங்கி வைக்கப்பட்டது.

அந்தவகையில் வவுனியா சாந்தசோலை கிராமத்தில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் ஒருவேளை உணவுக்கே அல்லல்படும் நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்துக்கு ஒரு மாதத்திற்கு போதுமான உணவுப் பொதியும், குறிப்பாக அவர்களின் ஆறுமாத கைக்குழந்தைக்கு பால்மா வகையும், பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளுக்கு ஒரு தொகை கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் நேற்றைய மாலை நிகழ்வாக, நெடுங்கேணி ஒலுமடு பிரதேசத்தில் உள்ள வேலடி கிராமத்தில் முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு (சுமார் 43 மாணவர்களுக்கு) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்ச்சியாக, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உப தலைவரும் இயக்கத்தின் இராணுவத் தளபதியுமான மாணிக்கதாசன் அவர்களின் இருபதாவது நினைவு தினத்தை கௌரவப்படுத்தும் வகையில் பல்வேறு சமுக பங்களிப்பு இன்றும் (03.09.2019) தொடர்ந்து செய்யப்பட்டது.

நேற்றைய தினத்தில் வவுனியா மாவட்டத்தில் உணவுப் பொதிகளும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் முருகண்டி பொன்னகரில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் மூன்று பச்சிளம் குழந்தைகளோடு ஒருவேளை உணவுக்கே சிரம்ப்படும் தாய்க்கு உணவுப் பொதியும், ஒரு தொகைப் பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த தாயும் பிள்ளைகளும் குடியிருந்த வீட்டுக்காரர், வாடகை கொடுக்கவில்லை என்ற காரணத்தினால் இவர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்ல குழந்தைகளோடு வீதியில் நின்ற போது, அந்த கிராமத்தில் வாழும் தம்பதி ஒருவர் இவர்களை கூட்டிச் சென்று தங்கள் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

இன்றைய நாளில் அந்த தாய்க்கு உதவி செய்யும் போது, இவர்களுக்கு வீடு வழங்கியவர் அவ்விடத்தில் கட்டியிருந்த “பெனரை”ப் பார்த்து விட்டு கண்கலங்கி “தான் புளொட் இயக்கத்தை சேர்ந்தவர் என்றும், நெடுந்தீவு பிரதேசசபைத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டதையும், “புளொட்” தலைவர் சித்தார்த்தன் அவர்கள் தமக்கு உதவி இருந்ததையும், மறைந்த தோழர்கள் பாரூக், இளங்கோ அவர்களுடன் பழகிய அந்த அழகிய நாட்களையும் கண்ணீரோடு நினைவு கூர்ந்தார்.

அத்தோடு தனது பெயர் இரத்தினம் என்றும், தனது மனைவி நாளாந்தம் கூலி வேலைக்கு போய் வருகின்ற உழைப்பை நம்பித்தான் வாழ்க்கை போவதாகவும் குறிப்பிட்டு, தனக்கு வருத்தம் வந்தால் தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும், தனக்கும் இயக்கத்தால் உதவி செய்ய முடிந்தால் நல்லது எனவும் கேட்டுக் கொண்டார். இவரின் கோரிக்கை “புளொட்” சுவிஸ் நாட்டு தோழர்களிடம் உடன் அனுப்பப்பட்டது.

அதன் பின்னர் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள காந்தி சிறுவர் இல்ல மாணவர்களுக்கு தோழர் மாணிக்கதாசன் மற்றும் அவருடன் மரணித்த தோழர்களின் நினைவாக விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வை “புளொட்” கிளிநொச்சி மாவட்டத் தோழர். சூரி (உதயசூரியன்) தலைமையேற்று நடாத்தி இருந்தார்.

இந்திகழ்வைத் தொடர்ந்து, பொன்னகரில் வாழும் புளொட் தோழர் இரத்தினம் அவர்களின் கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட சுவிஸ் புளொட் தோழர்கள், உடனடியாக ஒருதொகை பணத்தை அவருக்கு வழங்கி வைக்கும்படி அனுப்பி வைக்க, தோழர் இரத்தினம் அவர்களுக்கு குறித்த உதவி உடன் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வுகளை, முழுமையாக பொறுப்பெடுத்து நடாத்தி உதவிய திரு.மாணிக்கம் ஜெகன் அவர்கள் தெரிவிக்கும் போது, “மறைந்த தோழர் மாணிக்கதாசன் மற்றும் அவருடன் விடுதலைக்கு விதையான தோழர்களின் இருபதாவது நினைவுதின நினைவேந்தலானது இரு நாட்களாக சமூக அறப்பணிகளால் நிறைவு பெற்றது சிறப்பாக வரவேற்கத்தக்கது. மண்ணில் மறைந்தாலும் பழகிய மக்கள் மனங்களிலும், தோழமை கொண்ட தோழர்கள், நண்பர்களது இதயங்களிலும் ஆண்டுகள் கடந்தும், வாழும் வீரபுருசராக “புளொட்” தளபதி மாணிக்கதாசன் இருப்பார். அவர் புகழ், வீரம், ஈகம் என்றும் நீங்காது திலைத்திருக்கும் என்பது உண்மை. மறைந்த வீரத் தோழர்களுக்கு வீரவணக்கங்கள் எனவும், மேற்படி நிகழ்வுகளுக்கான நிதி உதவியை வழங்கிய “புளொட்” சுவிஸ் கிளைத் தோழர்களுக்கு நன்றி” எனவும் குறிப்பிட்டார்.

தகவல்…. “அதிரடி” இணையத்துக்காக திரு.செந்தமிழ்

(குறிப்பு:- தளபதி மாணிக்கதாசன் உட்பட்ட தோழர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாளில்; யுத்தத்தாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு நிலையை கருத்திற் கொண்டு, பல்வேறு சமூக நலன்சார் உதவிகள் வழங்கும் “சிறியதொரு” நிகழ்வுகளுக்கு “புளொட் சுவிஸ் கிளை” தோழர்களான வரதன், சித்தா, அசோக், பாபு, செல்வபாலன், ரமணன், ரஞ்சன் ஆகியோரின் சிறியதொரு நிதிஉதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.)

**படங்கள் & வீடியோ உதவி… திரு.மாணிக்கம் ஜெகன்.

மறைந்த “புளொட்” தளபதி தோழர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறுபட்ட சமூகநலப் பங்களிப்பு..!! (படங்கள் & வீடியோ)

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (இருபதாவது நினைவு தினம்)

வவுனியாவில், “புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின், “நினைவு தினத்தில்” தாகசாந்தி நிலையம்..! (படங்கள் & வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*