;
Athirady Tamil News

சுவிஸ் “ஒபேர்புர்க்”குமார் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கிய வாழ்வாதார உதவி.. (படங்கள்)

0

“அதிரடி”யின் ஏற்பாட்டில் சுவிஸ் “ஒபேர்புர்க்”குமார் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கிய வாழ்வாதார உதவி.. (படங்கள்)

வவுனியா தம்பனைச்சோலையில் கணவரால் கைவிடப்பட்ட நிலையில், நான்கு பிள்ளைகளுடன் மிகவும் வறிய நிலையில் வாழும் திருமதி.ஜெயராணி என்ற தாய் ஒருவர் தனது பிள்ளைகளின் கல்விக்கும், உணவுத் தேவைக்கும் அன்றாட கூலி வேலை செய்துவரும் நிலையில்; மழைகாலத்தில் தொழில் வாய்ப்பு இன்றிய நிலையில் தனக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைக்கும்படி “அதிரடி” இணையத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் “அதிரடி” இணையம் மூலமாக அந்த குடும்பத்துக்கு பல்வேறு உதவிகள் ஏலவே வழங்கப்பட்டது..

இந்நிலையில் அண்மையில் அந்த தாயின் வேண்டுகோளின்படி, “தொதல்” செய்து கடைகளுக்கு விற்பனை செய்யும் வகையில் அதற்குரிய உற்பத்தி உபகரணப் பொருட்கள் அடங்கிய பொதியினை, சுவிஸில் தனது ஐம்பதாவது பிறந்த நாளை கொண்டாடும், புளொட் அமைப்பின் தீவிர ஆதரவாளரும், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் தீவிர செயற்பாட்டாளர்களில் ஒருவருமான திரு. கிருஸ்ணகுமார் (ஒபேர்புர்க் குமார்) அவர்களின் குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் திரு.மாணிக்கம் ஜெகன் அவர்களூடாக வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வுதவியை பெற்றுக் கொண்ட திருமதி.ஜெயராணி என்ற அந்த குடும்பத் தலைவி, “அதிரடி” நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்ததுடன், கிருஸ்ணகுமார் அவர்களுக்கு வாழ்த்தினையும், அவரது குடும்பத்துக்கு நன்றியினையும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 2 =

*