;
Athirady Tamil News

ஐந்தாமாண்டு விழிநீர் நினைவுதினம்! அமரர் ஐயாத்துரை சுகதரன் (சுவிஸ் வீடியோ சுதா)

0

ஐந்தாமாண்டு விழிநீர் நினைவுதினம்

அமரர் ஐயாத்துரை சுகதரன் (வீடியோ சுதா)
ஜனனம்: 17.04.1968 (புங்குடுதீவு-1) மரணம்: 08.01.2015 (சுவிஸ்)

எதற்கும் அஞ்சாத எம் நண்பனே..
நீ மறைந்து ஐந்தாண்டுகளா?..
எப்பொழுதும் மறவாது,
முப்பொழுதும் என் முன்னே..
மூச்சுக்கு மூச்சாய்,
முக்குளித்து வாழ்ந்தவனே..
எம் இதயத்தில் நீங்காது
இருக்கும் நண்பனே சுதா..

உன் சிரிப்பு தொலைந்து,
சித்திரவதை செய்யுதடா..
வாடி நின்றோர்க்கு
தோளோடு தோள் கொடுத்து..
துவண்டு போகாது உன்
கரம் கொடுத்து தூக்கி விட்டவனே..
ஏனடா சீக்கிரமாய் சித்திரமானாய்?.

பிறப்பிலே ஓரூராய் இருந்து..
உற்ற நண்பனாய் பழகி
புலம் பெயர்ந்த போது,
ஒரே நாட்டில் வாழ்ந்த…
அந்த.. பழைய நினைவு
தினமும் பாழ்படுத்தும் கனவு..

எம் தோழனே.. எழுந்து வா,
“சுதா” எனச் சொல்ல மனம்
சதா தினமும் சல்லடை போடுதடா..

உன் நினைவுகளோடு..
ஐந்தாம் ஆண்டையும் தாண்டி..
எம் உயிர் உள்ளவரை
உன் நினைவுகளோடு,
எம் பயணம் தொடரும்..
எம் நண்பனே, எமது அஞ்சலிகள்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்..!

-உனது ஆருயிர் அன்பு நண்பன் ரஞ்சன் மோகனா குடும்பம்
மற்றும் உறவுகள், நண்பர்கள் & தோழர்கள்.-

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × two =

*