;
Athirady Tamil News

“புளொட்” செயலதிபரின் பிறந்தநாளை ஒழுங்குபடுத்தி, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்த “கைவேலி பெண்கள்”…! (படங்கள்& வீடியோ)

0

“புளொட்” செயலதிபரின் பிறந்தநாளை ஒழுங்குபடுத்தி, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்த கைவேலி பெண்கள்…! (படங்கள்)

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) செயலதிபர் அமரர். தோழர் உமா மகேஸ்வரன் அவர்களது எழுபத்தைந்தாவது பிறந்ததினத்தை தாங்கள் வாழும் புதுக்குடியிருப்பு கைவேலி கிராமத்தில் ஒழுங்குபடுத்திய பெண்கள் தலைமைத்துவ குடும்பதலைவிகள் “சுவிஸ் புளொட் தோழர்களினால்” வழங்கப்பட்ட தண்ணீர்ப் போத்தலுடன் கூடிய கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதியினை மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.

நேற்று வவுனியா சாந்தசோலை பகுதியிலும், இன்றுகாலை முல்லைத்தீவு உடையார்கட்டு இருட்டுமடு பகுதியிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றது நீங்கள் அறிந்ததே.

இதனைத் தொடர்ந்து இன்றுமாலை புதுக்குடியிருப்பு கைவேலி கிராமத்தில் “யுத்தம் தங்களது குடும்பத்தலைவர்களை காவு கொண்ட நிலையில்”, பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள் ஒன்றிணைந்து துணிகளுக்கு சாயமிடும் குடிசை கைத்தொழிலில் ஈடுபட்டு தங்களது குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். இந்நிலையில் புளொட் செயலதிபர் பிறந்தநாளை தாமாகவே ஒழுங்குபடுத்திக் கொண்டாடினர்.

போதிய உழைப்பு இல்லாத நிலையில் தம்மால் இயன்றவரை குழுவாக ஒன்றிணைந்து குடிசைக் கைத்தொழிலில் ஈடுபட்டு வரும் இவர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக ஆறுதலாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் புளொட் செயலதிபரின் பிறந்தநாள் தொடர்பாக தகவலறிந்து, எம்மோடு தொடர்பு கொண்டு “தங்கள் பிள்ளைகளின் தேவை பற்றி கூறியதுடன், நிகழ்வை தாமே ஒழுங்குபடுத்தி நேர்த்தியாக நடாத்தி தருவதாக” கேட்டுக் கொண்டார்கள்..

அவர்களின் ஒழுங்கிபடுத்தலில் சுவிஸ் தோழர்களின் பங்களிப்பில் கிடைக்கப் பெற்ற “தண்ணீர் போத்தலுடன் கூடிய பெறுமதியான கற்றல் உபகரணப் பொதிகளை” பெற்றுக் கொண்டனர். முன்பள்ளி மாணவர்கள் தொடக்கம் சாதாரண தரம் மாணவர்கள் வரை நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இந்நிகழ்வில் மாணவர்களுடன் பெற்றோர்களும் சுய தொழில் முயற்சியில் ஈடுபடும் குடும்பத்து பெண்களும் கலந்து கொண்டனர். தேவையறிந்து உதவிய “புளொட்” சுவிஸ் கிளைத் தோழர்களுக்கு தமது நன்றியை மாணவ செல்வங்களின் சார்பில் பெற்றோர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

மேற்படி நிகழ்வுக்கான, நிதிப் பங்களிப்பை “புளொட்” சுவிஸ்கிளைத் தோழர்கள் ஆனந்தன் (சூரிச்), வரதன் (சூரிச்), தேவண்ணர் (கிளரொஸ்), பாபு (சூரிச்), பிரபா (சூரிச்), செல்வபாலன் (சொலத்தூண்), ரமணன் (செங்காலன்), ரஞ்சன் (ஒபேர்புர்க்) ஆகியோர் வழங்கி இருந்தனர். மேற்படி “புளொட்” சுவிஸ்கிளைத் தோழர்களின் நிதிப் பங்களிப்பில், இன்று மாலை கிளிநொச்சி பகுதியிலும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் & படங்கள்… திரு.மாணிக்கம் ஜெகன் -வவுனியா.

மக்கள் தலைவர் “புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, “சுவிஸ் தோழர்களால்” கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு..! (படங்கள்)

“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, உடையார்கட்டில் “சுவிஸ் தோழர்களால்” கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு..! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × one =

*