;
Athirady Tamil News

“புளொட்” செயலதிபரின் பிறந்தநாளில், “செஞ்சோலை” உறவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..! (படங்கள் & வீடியோ)

0

“புளொட்” செயலதிபரின் பிறந்தநாளில், “செஞ்சோலை” உறவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..! (படங்கள் & வீடியோ)

மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதியும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபருமான அமரர்.உமா மகேஸ்வரன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு கிளிநொச்சி செஞ்சோலை கிராமத்தில் வசிக்கும் செஞ்சோலை உறவுகளின் குழந்தைகளுக்கு அவர்கள் கேட்டுக் கொண்டதற்கமைய, வகுப்பு ரீதியாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நேற்றுமுன்தினம் வவுனியா சாந்தசோலை பகுதியிலும், நேற்றுக்காலை முல்லைத்தீவு உடையார்கட்டு இருட்டுமடு பகுதியிலும், நேற்றுமாலை புதுக்குடியிருப்பு கைவேலி கிராமத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் “புளொட் சுவிஸ் கிளைத் தோழர்களின்” நிதிப் பங்களிப்பில் நடைபெற்றது நீங்கள் அறிந்ததே.

இதனைத் தொடர்ந்து “கிளிநொச்சி செஞ்சோலையில் வளர்ந்து, இறுதி யுத்ததில் இடம்பெயர்ந்து வவுனியாவில் டோன்போஸ்கோ இல்லத்தில் பராமரிக்கப்பட்டு, சமூகத்தோடு இணைக்கப்பட்டவர்கள் பின்னர் திருமண பந்தத்தில் இணைந்து, கிளிநொச்சி செஞ்சோலை கிராமத்தில் மிகவும் நெறுக்கடியான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்”.

அவர்களுக்கான காணி உரிமையோ வீட்டுத்திட்ட வசதிகளையோ இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை. இந்திலையில் தங்களது பிள்ளைகளின் கல்வி செலவுக்கு பெரும் பிரச்சினையை எதிர்நோக்கிய நிலையில், புளொட் செயலதிபர் அவர்களுடைய பிறந்தநாளில் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக, முன்பள்ளி சிறுவர்களுக்கு தண்ணீர்ப் போத்தல் கொப்பி வகைகள் உட்பட கற்றல் உபகரணங்கள் அடங்கிய பெறுமதியான பொதி, அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் செஞ்சோலை உறவுகள், அவர்களது பிள்ளைகள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தேவையறிந்து உதவிய “புளொட்” சுவிஸ் கிளைத் தோழர்களுக்கு தமது நன்றியை மாணவ செல்வங்களின் சார்பில் பெற்றோர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

மேற்படி நிகழ்வுக்கான, நிதிப் பங்களிப்பை “புளொட்” சுவிஸ்கிளைத் தோழர்கள் ஆனந்தன் (சூரிச்), வரதன் (சூரிச்), தேவண்ணர் (கிளரொஸ்), பாபு (சூரிச்), பிரபா (சூரிச்), செல்வபாலன் (சொலத்தூண்), ரமணன் (செங்காலன்), ரஞ்சன் (ஒபேர்புர்க்) ஆகியோர் வழங்கி இருந்தனர்.

தகவல் & படங்கள்… திரு.மாணிக்கம் ஜெகன் -வவுனியா.

மக்கள் தலைவர் “புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, “சுவிஸ் தோழர்களால்” கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு..! (படங்கள்)

“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, உடையார்கட்டில் “சுவிஸ் தோழர்களால்” கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு..! (படங்கள்)

“புளொட்” செயலதிபரின் பிறந்தநாளை ஒழுங்குபடுத்தி, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்த “கைவேலி பெண்கள்”…! (படங்கள்& வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 10 =

*