;
Athirady Tamil News

கொறோனா நோய்த் தொற்றுப் பேரிடர்: சுவிசில் அவசரகால நடைமுறை..! (வீடியோ)

0

கொறோனா நோய்த் தொற்றுப் பேரிடர்: சுவிசில் அவசரகால நடைமுறை (வீடியோ)
 
16. 03. 2020 நள்ளிரவு 00.00 மணிமுதல் கொறோனா நோய்த் தொற்றுப் பேரிடர் காரணமாக அவசரகால நடவடிக்கை செயற்படுத்தப்படுகின்றது. நள்ளிரவு முதல் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்படவேண்டும் எனும் நடவடிக்கையினை சுவிற்சர்லாந்து நாட்டின் அதிபர் திருமதி. சிமோனெற்ரா சமறுக்கா இன்றைய சிறப்பு ஊடகவியலாளர் நேர்கணாலில் அறிவித்தார். நாளாந்தப்பயன்பாட்டிற்கு தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யக்கூடிய கடைகள் மட்டுமே திறந்திருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

அவசரகாலப் பிரகடனம் இத்தலைமுறைக்குப் புதிதாகவே அமைந்துள்ளது. 2வது உலகப் போருக்குப்பின்னர்சுவிசில் நடைமுறைக்கு இவ்வகையான நடவடிக்கையினை சுவிற்சர்லாந்து நாடு எடுத்திருக்கின்றது. 

நடுவன்அரசு இன்று அறிவதித்திருக்கும் அவசரகால நடவடிக்கையினை அமுல்படுத்த முன்னர், சில மாநிலங்கள் இதனைத்தன்முனைப்பில் நடைமுறைப்படுத்தியிருந்தன. அத்துடன் 19. 04. 2020 வரைக்கும் நீத்தார்கடன் (மரணச்சடங்கு) தவிர்ந்த அனைத்து நிகழ்வுகளையும் இடைநிறுத்த வேண்டியுள்ளது. நோயின் தொற்றின் பரவல் வேகத்தினைக் கட்டுப்படுத்த இத்தகைய வரலாறுகாணத நடைமுறையினை சுவிற்சர்லாந்து மேற்கொள்ளவேண்டி உள்ளது எனவும் விளக்கப்பட்டுள்ளது.
 
அனைத்துக்கடைகளும், உணவகங்களும், மதுபானசாலைகளும், அதுபோல் பொழுதுபோக்கு நிறுவனங்களும் உடன் மூடப்படுகின்றன. விதிவிலக்குஅளிக்கப்பட்டு திறந்திருக்கக்கூடிய நிறுவனங்கள் உணவுப்பொருள் அங்காடிகள் மற்றும் உடல்நலன்பேணும் மருத்துவமனை மற்றும் மருந்தகங்களும் ஆகும்.
 
இவ்அவசரகால நடவடிக்கையின் பயன் அனைத்து மாநிலங்களும்நடுவன் அரசின் அறிவித்தலை அப்படியே நடைமுறைப்படுத்த கடமைப்படுகின்றன. மாநிலங்களின் தனித்துவ சுயாட்சி உரிமைகள் நடுவன் அரசின் அவசரகால நிலையில் மட்டுப்படுகின்றன. சுவிசின் நாட்டின் ஐந்து முனைகளில் அமைந்திருக்கும் எல்லைகளிலும் உள்நுழைவுச் சோதனை எல்லைக்காவற்துறையால் மேற்கொள்ளப்படுகின்றது.
 
8000 இராணுவவீரர்கள் எல்லைச் சோதனைகளிலும் காவற்துறைக்கு துணையாகவும், வழங்கற்பிரிவிலும் பணியாற்றப் பணிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுவிஸ் வாழ் மக்கள் போதிளவுஇடைவெளி விட்டுக் கொள்வதுடன் இச்சூழலின் கடுமை நிலையினை புரிந்துணர்வுடன் எதிர்கொள்ளவும் நடுவன் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.
 
இந்நடவடிக்கைகள் எமது உடல் நலனைப்பேணுவதை முதன்மை நோக்காகக் கொண்டுள்ளது. சுவிசின் தற்போதைய நல்வாழ்வுத் துறையின் (சுகாதரத்துறையின்) வலுவினை தக்கவைத்துக் கொள்வதை இலக்காகக் கொண்டுள்ளது. 
 
தேவையற்று பொருட்களைக் களஞ்சியப்படுத்தாதீர்

சுவிற்சர்லாந்துஅரசு 100 கோடி சுவிஸ்பிராங்குகளை இப்பேரிடர் காலஅவசர உதவிக்காக ஒதுக்கி உள்ளது. இவை சிறு மற்றும்நடுநிலை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நட்டததை ஈடுசெய்வதற்கு ஒதுக்கப்பட்ட தொகை ஆகும். சுவிற்சர்லாந்துஅரசு இதைவிடப் பெரிய தொகை அடுத்த கட்டநடவடிக்கைக்கு தேவைப்படும் என்பதை உணர்ந்திருப்பதாகவும், தேவைக்கேற்ப கூடுதல் நிதியினை எதிர்காலத்தில் ஒதுக்க இருப்பதாகவும் சுவிஸ் அதிபர் அறிவித்தார்.
 
நலவாழ்வு (சுகாதார) அமைச்சர் திரு. அலான் பெர்சே அவர்கள் அனைத்து சுவிஸ் வாழ் மக்களிடமும் வேண்டுகோள்விடுத்தார்: தயவுசெய்து வீணாகப் பொருட்களை வீடுகளில் வேண்டு அடுக்காதீர்கள். அத்தியாவசியப் பொருட்களை நீங்கள் களஞ்சியப்படுத்தத்தேவையில், அனைவருக்கும் எப்போதும் போதியளவு பொருட்கள் கிடைக்கும் அளவிற்கு நாம் வழங்கலை மேற்கொள்ளுவோம். சுவிற்சர்லாந்தின் வாழ்வின் வேகம் குறைக்கப்பட்டு வட்டம் சுருக்கப்படுகின்றதே தவிர, வாழ்வு நிறுத்தப்படவில்லை. ஆகவே உங்கள் ஒத்துழைப்பினைவழங்க வேண்டுகின்றேன் என தனது கோரிக்கையினைவிடுத்தார்!
 
நடைமுறைக்குவரும் அவசரகாலச் நடைமுறையின்படி இனி மாநிலத்திற்கு மாநிலம்நடவடிக்கைகளில் வேறுபாடு இல்லை. 19. 04. 2020 வரை சுவிஸ் முழுவதும்அவசரகால நடைமுறையே அமுலில் இருக்கப்போகின்றது…
 
தொகுப்பு: சிவமகிழி

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + sixteen =

*