;
Athirady Tamil News

புங்குடுதீவு மக்களின் பங்களிப்பில்; ஜே/26 வாழ் மக்களுக்கு, “தாயகம்” அமைப்புத் தலைவியின் மூலமாக அத்தியாவசியக் கொடுப்பனவு.. (படங்கள்)

0

புங்குடுதீவு மக்களின் பங்களிப்பில், ஜே 26 வாழ் மக்களுக்கு “தாயகம்” அமைப்புத் தலைவியின் மூலமாக அத்தியாவசியக் கொடுப்பனவு.. (படங்கள்)

“கொரோனா வைரஸ்” காரணமாக உள்ள ஊரடங்கு நிலையைக் கருத்தில் கொண்டு,  புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தை சேர்ந்த புலம்பெயர் மக்கள் சிலர் “புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகத்தின்” தலைவியான திருமதி சுலோசனாம்பிகை தனபாலன் அவர்கள் ஊடாக, அனுப்பி வைத்த 1500 தேங்காய்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட சவற்காரக் கட்டிகள் போன்றவை புங்குடுதீவு ஜே 26 வாழ் மக்களுக்கு இன்றையதினம் வழங்கப்பட்டது.

மேற்படி புனர்நிர்மாண சேவைக்காக, (“தேங்காய்” வழங்கியமைக்காக) கனடாவில் வதியும் திருமதி முகுந்ததாசன் பரமேஸ்வரி சார்பில் லண்டனில் வதியும் முகுந்ததாசன் செல்லத்துரை குடும்பத்தினரும், கனடாவில் வதியும் யோகேஸ்வரன் சின்னமணி சார்பில் பிரான்சில் வதியும் மதிவண்ணன் யாழினி குடும்பத்தினரும், கனடாவில் வதியும் சண்முகநாதன் லீலாவதி குடும்பத்தினரும், காலம்சென்ற செல்லையா நல்லம்மா ஞாபகர்த்தமாக கனடாவில் வதியும் செல்லையா சிவரூபன் குடும்பத்தினரும்,

மேற்படி புனர்நிர்மாண சேவைக்காக, (“சவர்காரக்கட்டி”  வழங்கியமைக்காக) கனடாவில் வதியும் திருமதி முகுந்ததாசன் பரமேஸ்வரி சார்பில் லண்டனில் வதியும் முகுந்ததாசன் செல்லத்துரை குடும்பத்தினரும், கொழும்பில் வதியும் திரு.லக்ஷ்மன் நீலுக்சனின் பதினெட்டாவது பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது பெற்றோர்களும் வழங்கி வைத்துள்ளனர்.  

மேற்படி புனர்நிர்மாண உதவிகளை வழங்கியோர் “புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தை சேர்ந்தவர்கள்” என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி புனர்நிர்மாண நடவடிக்கை இன்றையதினம் புங்குடுதீவு ஜே 26 கிராம சேவகர் திரு.சந்திரசேகரம் ஸ்ரீதரன் அவர்களின் முன்னிலையில் வழங்கப்பட்டது.

இதேவேளை ஊரடங்கு சூழ்நிலையிலும், பொதுப்  போக்குவரத்து இல்லாத போதிலும், தனது சொந்த வாகனத்தில் “சவர்காரக்கட்டிகளை” (சோப்) கொண்டு வந்து தந்த முன்னாள் வடமாகாண சபையின் விவசாய அமைச்சர் திரு.பொ.ஐங்கரநேசன் அவர்களுக்கும், கொடிகாமத்தில் இருந்து “தேங்காய்களை” கொள்வனவு செய்து எமது கரங்களில் நேரடியாக கொண்டு வந்து தந்துதவிய திரு.சி.புஷ்பரூபன் (முத்து) அவர்களுக்கும், இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த, விருந்தினர்களுக்கும், பயனாளிகளுக்கும், பொதுமக்களுக்கும், “தாயகம் சமூக சேவையகம்” சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

–தகவல்… திருமதி.காஞ்சனா (பொருளாளர், தாயகம் சமூக சேவையகம் புங்குடுதீவு)–

http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%aa%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + 18 =

*