புங்குடுதீவு அமரர் மு.பத்மநாதன் அவர்களின் நினைவாக “வாழ்வாதார உதவி”..!

புங்குடுதீவு அமரர் மு.பத்மநாதன் அவர்களின் நினைவாக “வாழ்வாதார உதவி”..!
கொவிட் 19 வைரஸ் நோயின் பாதிப்பினால் அன்றாட தினக்கூலிக்கு செல்ல முடியாமல் வறுமையில் உள்ள, கிளிநொச்சி உதயநகர் மேற்கை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு யோகலிங்கம் ராயூ அவர்களின் முயற்சியிலும், சுவிஸில் வதியும் திரு.பத்மநாதன் வசந்தன் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பிலும் நிவாரணப் பொதி வழங்கி வைக்கப்பட்டது.
புங்குடுதீவு பன்னிரெண்டை பிறப்பிடமாகவும், புங்குடுதீவு ஒன்பதை (வல்லனை) வாழ்விடமாகவும் கொண்ட அமரர் முருகேசு பத்மநாதன் அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு, சுவிஸில் வதியும் அவரது மகன் பத்மநாதன் வசந்தன் அவர்களின் நிதிப் பங்களிப்பில் மேற்படி நிவாரணப் பொதி வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி உதவியை வழங்கி வைத்த, பத்மநாதன் வசந்தன் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல் & படங்கள்… ராஜு ராஜ் -கிளிநொச்சி