புங்குடுதீவு முதலாம் வட்டார மக்களுக்கான, “பேரிடர்கால நிவாரண உதவி” (படங்கள்)
புங்குடுதீவு முதலாம் வட்டார மக்களுக்கான “பேரிடர்கால நிவாரணப் பணி” (படங்கள்)
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, புங்குடுதீவு முதலாம் வட்டார நண்பர்கள் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், ஆதவாளர்களின் குடும்பத்தினற்கு சுவிஸ் சூறிச்சில் வதியும், திரு.ஆறுமுகம் பிரசாத் (சிவாஜி) அவர்களின் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில், “நண்பர்கள் சனசமூக நிலைய”த்தினூடாக உலர்உணவு வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி உலருணவுப் பொதிகளை அப்பிரதேசத்தை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பெற்று பயனடைந்துள்ளனர்.
மேற்படி உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சுவிஸில் உள்ள வேலுப்பிள்ளை கிருஷ்ணகுமார் ஏற்பாடு செய்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-தகவல் & படங்கள்… “புங்கையூரான்”