சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய உறுப்பினர்களுக்கான அறிவித்தல்..

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய உறுப்பினர்களுக்கான அறிவித்தல்..
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தமது புதிய நிர்வாகசபையை தெரிவு செய்வது, அன்றில் அதுகுறித்து உறுதியான தீர்மானம் எடுப்பதுக்காக சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய உறுப்பினர்களுக்கான கூட்டத்தை எதிர்வரும் 07.06.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு புர்க்டோர்ப் மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை இக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடியவர்கள் தங்கள் வருகையினை 05.06.2020 வெள்ளிக்கிழமை பகல் பத்து மணிக்கு முன்பாக தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரில் யாராவது ஒருவருக்கேனும் தொலைபேசி மூலம் தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
ஏனெனில் நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, வருவோரின் எண்ணிக்கையைப் பொறுத்தே சந்திப்பு நடைபெறும் இடத்தை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. ஆகவே மறவாது (கட்டாயமாக) தங்கள் வருகையை 05.06.2020 வெள்ளிக்கிழமை பகல் பத்து மணிக்கு முன்பாக எமக்கு தெரியப்படுத்தி உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தவிர்க்க முடியாத காரணங்களினால் (விடுமுறை, சுகயீனம், வேலை போன்ற காரணங்களினால்) இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பின், உங்கள் கருத்தை எழுத்து மூலம் ஒன்றியத் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் வாட்சப் இலக்கத்துக்கோ (077.9485214) அவரது மின்னஞ்சலுக்கோ (swissranjan@gmail.com) உடன் (31.05.2020 க்கு முன்பாக) அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்வதுடன், முடிந்தவரை அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”
இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
25.05.2020