*மரண அறிவித்தல்* திருமதி நடேசன் பூபதி

*மரண அறிவித்தல்*
திருமதி நடேசன் பூபதி
பிறப்பு:13.06.1943 இறப்பு: 28.05.2020
நெடுந்தீவை பிறப்பிடமாகவும் வவுனியா பெரியதம்பனை, இல26 வதிவிடமாகவும் கொண்ட திருமதி நடேசன் பூபதி அவர்கள் இன்று இறைவன் அடி சேர்ந்துள்ளார் என்பதனை உற்றார் உறவினர்களுக்கு அறிய தருகின்றனர்.
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
திருமதி நடேசன் பூபதி
பிறப்பு:13.06.1943 நெடுந்தீவு
இறப்பு: 28.05.2020 பெரியதம்பனை,வவுனியா
புன்சிரிப்பழகி பூபதி மச்சாள்..
பூவுலக வாழ்வை பூர்த்தி செய்தாயோ?..
கண் சிமிட்டி கலகலப்பாக பேசி,
எங்களை மகிழ்வித்த மச்சாளவள்,
உறவை மரணம் .. அறுத்ததுவோ
சிலேடையாக பேசுவதில் சிங்காரி
பேச்சின் நடுவிலே சிரிப்பைக் கலந்து,
அன்போடு பாசம் பொழியும்..
எங்கள் பூபதி மச்சாள்..
வேசம் போடத் தெரியாத..
வெள்ளை உள்ளம் எங்கள்..
பெரிய மச்சாளுக்கு..
ஊரில் உள்ள புதினங்களை..
ஆர்வத்தோடு அறியத் தருவாள்..
இட்டுக்கட்டி எதுவும் சொல்ல மாட்டாள்..
எடுத்தெரிஞ்சு மனசு நோகும்படியும்..
மச்சாள் பேச மாட்டாள்..
ஊருக்குள்ள மூத்த மச்சாள்..
சொல்லுற கதைக்கு அப்பீல் இல்ல..
மச்சாள் இருக்கும் இடம் கலகலக்கும்..
மச்சாள் கதைகளைவிட
அவள் கண்களும் கதைகள் பேசும்.
“சாந்தி” என்றழைக்கும்
அந்தக் காந்தக் குரல்..
முழுமையாக நின்று போச்சு..
ஆசை மச்சாள் கதைகளைக் கேட்டு
அவவ்வோட வாழ்ந்த காலம்..
இன்னும் நெஞ்சில் பசுமையாக..
இளமைக் கால நினைவுகளாக…
இதயம் கனக்கும் வலியும் ஆச்சு..
உறவுக்கெல்லாம் உயர்ந்த உறவு..
ஒளிவுமறைவு எதுவும் இல்லாத உறவு..
இளமைக்கால ஐயங்களை
இரகசியமாக கலையும் உறவு..
இறுக்கமான மூத்த மச்சாள் உறவு.
ஆசையோடு அழைக்க
மூத்த மச்சாள் உலகில் இல்லை..
பேசிப் பேசி பொழுது போக்கிய
பெரிய மச்சாள் இனிப் பேசமாட்டா..
உரிமையான சொந்தம் ஒன்று.
உறங்கிப் போன செய்தி கேட்டு..
விழி நனைந்து கரைகிறது.
விம்மி நெஞ்சம் வெடிக்கிறது..
சொந்தங்களின் விம்பமாக
பூபதி மச்சாள் எங்களுக்கு..
அந்தரமாக இருக்கிறது
இனி யார் வருவா?,
பூபதி மச்சாளைப் போல..
பூத்தூவி வணங்குகின்றேன்.
பூபதி மச்சாள் ஈசன் பாதம் இருப்பாள்..
ஓம் சாந்தி.. ஓம் சாந்தி.. ஓம் சாந்தி..
-திருமதி சாந்தி (மோகனா) ரஞ்சன், சுவிஸ் –