;
Athirady Tamil News

புங்குடுதீவு அமரர்.சி.சிவமணி நினைவாக, வவுனியா தாலிக்குளத்தில் உதவிகள் வழங்கி வைப்பு..! (படங்கள் & வீடியோ)

0

புங்குடுதீவு அமரர்.சி.சிவமணி நினைவாக, வவுனியா தாலிக்குளத்தில் உதவிகள் வழங்கி வைப்பு..! (படங்கள் & வீடியோ)

அமரர் சிவமணி சிவலிங்கம் அவர்களது நினைவு தினம் வவுனியா தாலிக்குளம் கிராமத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ் புங்குடுதீவை பதினொன்றைப் பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சிவமணி சிவலிங்கம் அவர்களது இரண்டாவது சிரார்த்ததினம் அன்னாரது சுவிஸ், கனடா, ஜேர்மனியில் வாழும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகளால் தாயகத்தில் பல்வேறு இடங்களில் பலதரப்பட்ட சமுக நல உதவிகள் வழங்கி அனுஸ்டிக்கப்பட்டது.

இன்றுகாலை வவுனியா காத்தார் சின்னக்குளம் கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கும், தரணிக்குளம் மாணவர்களுக்கும், தாலிக்குளம் மாணவர்களுக்கும், ஈஸ்வரிபுரம் கிராம மாணவர்களுக்கும், மணிப்பூரம் மாணவர்களுக்கும் மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி கிராமத்து மாணவர்களுக்கும் அமரர் சிவமணி சிவலிங்கம் அவர்களின் இரண்டாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கல்வி கற்றல் சிறப்பு உதவிகள் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இன்றுமாலை வவுனியா தாலிக்குளம் மாணவர்களுக்கு கற்றல் உதவிகள் வழங்கப்பட்டதுடன், கொரோனா தொற்று நோய் மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாக தொழில் இன்றி வறிய நிலையில் காணப்படும் பதினைந்து குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று நோய் மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாக தொழில் இன்றி வறிய நிலையில் காணப்படும் கிராமங்களை தெரிவு செய்து மக்களுக்கு உலருணவுப் பொதி மற்றும் மாணவர்களுக்கு க.பொத சாதாரணதர பரீட்சை வினாத் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதேபோல் நாளையதினம் (அமரர் சிவமணி சிவலிங்கத்தின் திதியை முன்னிட்டு) வவுனியா மணிப்புரம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்து அன்னையர்களுக்கு மதியஉணவு வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து இறைபதமடைந்த தமது அன்னை அமரர் சிவமணி சிவலிங்கம் அவர்களது நினைவாக, தங்களின் முழுமையான நிதிப்பங்களிப்பில் “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்ற மூதுரைக்கு அமைவாக, இப்பெரும் அருங்காரியத்தை தாயக உறவுகளுக்கு செய்தமை போற்றுதலுக்குரியது.

இப்பெரும்பணியை முன்னின்று முயற்சித்து ஒழுங்குபடுத்தி தந்த சுவிஸ் வாழ் “அதிரடி” ரஞ்சண்ணை அவர்களுக்கு ஈழத்தின் மனமார்ந்த நன்றிகள். இவையனைத்தையும் ஜனனம் நம்பிக்கை மையம் ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்தியது.

உதவிய உள்ளங்களுக்கும், இதை ஒழுங்குபடுத்திய இதயங்களுக்கும் தாயக மக்கள் சார்பாக ஜனனம் நம்பிக்கை மையத்தின் மதிப்புமிகு நன்றிகள்.
“தேவைகள் தீரும்வரை சேவைகள் தொடரட்டும்”..

தகவல் & படங்கள்& வீடியோ… திரு.மாணிக்கம்ஜெகன், “ஜனனம் நம்பிக்கை மையம்” -வவுனியா.

புங்குடுதீவு அமரர்.சி.சிவமணி நினைவாக, கற்றல் வசதிகள் வழங்கி வைப்பு..! (படங்கள் & வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*