;
Athirady Tamil News

மட்டக்களப்பு மாவட்டத்தில், நிவாரண உலருணவுப்பொதி வழங்கிய “மாணிக்கதாசன் பவுண்டேசன்”.. (முழுமையான படங்கள்)

0

மட்டக்களப்பு மாவட்டத்தில், நிவாரண உலருணவுப்பொதி வழங்கிய “மாணிக்கதாசன் பவுண்டேசன்”.. (முழுமையான படங்கள்)

“தடைகைளை உடைத்து, சமூகத்தை உயர்த்து” எனும் தாரக மந்திரத்துடன், கடந்த 2020 மே முதலாம்திகதி அன்று சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்களுடன் இணைந்து “புளொட்” தோழர்கள் சிலரினால் ஆரம்பிக்கப்பட்ட “மாணிக்கதாசன் பவுண்டேசன்” எனும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஆனது “இன, மத, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து” வழமை போல் “மக்கள் பணியாற்றும்” என்பதை அனைவருக்கும் அறியத் தந்து முதலாவது நடவடிக்கையாக,
 
கடந்த மே முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட, “மாணிக்கதாசன் பவுண்டேசன்” எனும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஆனது தனது முதலாவது செயல்பாடாக, புளொட் சுவிஸ் தோழர் புவியின் நிதிப் பங்களிப்பில், செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் நினைவாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் தோழர். சந்திரகுலசிங்கம் மோகன் தலைமையில் வவுனியாவில் ஆரம்பித்து இருந்தனர், இதன் அடுத்தகட்டமாக இன்றையதினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிவாரண உணவுப்பொதிகள் வழங்கி இருந்தனர்.

அதாவது கொரோனா தொற்று நோய் தாக்கம் பரவாமல் தடுப்பதற்கு நாடு பூராவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவரும் சுமார் நாற்பது கழக ஆதரவாளர்கள் குடும்பங்களுக்கான “உலருணவுப் பொதியை” நிவாரணமாக “மாணிக்கதாசன் பவுண்டேசனின்” முழுமையான நிதி பங்களிப்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.  

மேற்படி நிகழ்வில், புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்டப் பொறுப்பாளரும், மத்தியகுழு உறுப்பினருமான தோழர் சூட்டி எனும் மயில்வாகனம் நிஷ்கானந்தராஜா தலைமையில், கழகத்தின் உபதலைவரும், மத்தியகுழு உறுப்பினருமான தோழர் கேசவன் எனும் செல்லத்துரை பொன்னம்பலம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும், கழகத்தின் மத்தியகுழு உறுப்பினருமான தோழர்.முருகேசு ஞானப்பிரகாசம், மட்டக்களப்பு மாவட்ட நிதிப் பொறுப்பாளர் தோழர் வரதன் எனும் நடேசலிங்கம் ராகவன், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் தோழர் முரளி எனும் காத்தலிங்கம் கமலநாதன், மட்டக்களப்பு மாவட்ட உபசெயலாளர் தோழர் கிருபா மாஸ்ரர் எனும் கந்தையா கிருபைராஜா ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

கொரோனா சூழ்நிலை காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு கஸ்டநிலையில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட கழக ஆதரவாளர்கள் 40 பேருக்கு “மாணிக்கதாசன் பவுண்டேசனினால்” அறுபதாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் முதல்கட்டமாக இன்றையதினம் ஒருபகுதியினருக்கு வழங்கி வைக்கப்பட்டது. மிகுதியானவர்களுக்கும் நாளைமுதல் கட்டம் கட்டமாக வழங்கி வைக்கப்பட உள்ளது.

மேற்படி உலருணர்வு நிவாரணப் பொதியை “மாணிக்கதாசன் பவுண்டேசன்” வழங்கி வைப்பதுக்கு, நிதிப் பங்களிப்பை கழகத் (புளொட்) தோழர்களான கோபி (அமெரிக்கா), தயாளன் (பிரான்ஸ்), ரமணன் (சுவிஸ்) புவி (சுவிஸ்) ரஞ்சன் (சுவிஸ்) ஆகியோர் வழங்கி வைத்து இருந்தனர்.

தகவல் & படங்கள்… மாணிக்கதாசன் நற்பணி மன்றம் -தலைமை செயலகம் -வவுனியா.

வவுனியாவில் “மாணிக்கதாசன் பவுண்டேசனின்” முதலாவது “நிவாரண உதவி வழங்கல்” நிகழ்வு.. (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 7 =

*