;
Athirady Tamil News

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய” செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.. (படங்கள் & வீடியோ)

0

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், ஊர்நோக்கிய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.. (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், இலங்கையில் வைப்பிலிடப்பட்ட நிதியிலும், எம்மிடம் (சுவிஸில்) உள்ள ஒன்றிய நிதியிலும் சுவிஸ் புங்குடுடுதீவு ஒன்றியம் சார்பாக ஆரம்பிக்கப்பட்ட, வரலாற்றுப் பெருமை வாய்ந்த மரபுரிமை சின்னமாகிய “புங்குடுதீவு பெருக்குமரம்” சுற்றாடல், மற்றும் அதனையொட்டிய கடற்கரைப் பிரதேசமும் அழகுபடுத்தல், “புங்குடுதீவு மயானங்களான” “குறிகட்டுவான் முனியப்பபுலம், வல்லன் நாவுண்டான்மலை, ஊரதீவு கேரதீவு, இறுப்பிட்டி கேரதீவு, கண்ணகைபுரம் மணற்காடு” ஆகியவற்றை புனரமைப்பதெனவும் தீர்மானித்து நடைமுறைப்படுத்தி வந்தவேளையில், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண (கொரோனா) சூழ்நிலை காரணமாக எமது செயற்பாடுகள் தடைப்பட்டு இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.

யாழ்ப்பாண வரலாற்றுப் பெருமை வாய்ந்த மரபுரிமை சின்னமாகிய “புங்குடுதீவு பெருக்குமரம்” சுற்றாடல், மற்றும் அதனையொட்டிய கடற்கரைப் பிரதேசமும் அழகுபடுத்தப்பட்டு (அதன் வேலைகள் முழுமையாக நிறைவுறாத நிலையிலும்) மக்கள் பாவனைக்கு வழங்கப்படும் நிகழ்வு 20.03.2020 அன்று நடைபெற்று இருந்த போதிலும், அதன் பின்னர் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண (கொரோனா) சூழ்நிலை மற்றும் அதன் காரணமாக நடைமுறைப் படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக தடைப்பட்டு இருந்த, புனரமைப்பு வேலைகள் இவ்வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

அதாவது, பெருக்குமர கிணற்றுக்கு முழுமையாக பூசப்பட்டு மற்றும் கிணற்றுக்கு உரிய கப்பி, வாளி போடப்படுவதுடன், கிணற்றை மூடி இரும்பு வளையம் போடுதல், பெருக்குமரத்தை சுற்றி, எட்டு கம்பிகள் வைத்து, மேலும் கீழுமாக இரண்டு சங்கிலிகள் சுற்றி போடுதல் (யாரும் மரத்தை சுற்றி உள்ள புல்தரையை மிதிக்காதவாறு), பெருக்குமர கடற்கரை மதிலுக்கு உடன் கேற் போடப்படுவதுடன், மதிலின் இரண்டு முடிவிலும் இடைவெளிகள் விடாமல் மூடுதல்,

பெருக்குமர பக்கத்து வேலி, பழமையான முறையில் பனை ஓலையால் உயரம் இல்லாமல் அடைத்தல், பெருக்குமர நடைபாதையில் இருந்து, விளையாடும் இடங்களுக்கு (நான்கு இடங்களுக்கும்) புல்தரைப் பாதை போடுவதுடன், நான்கு விளையாடும் இடங்களை சுற்றியும் இன்னும் மணல்கள் போடுதல், பெருக்குமர மலசல கூடத்தின் கதவுகளுக்கு உள்ளே கொழுக்கியும், வெளியே பூட்டும் போடுதல், பெருக்குமர முன்வாசலுக்கு மரத்தினால் கேட் (படலை) போடுதல் போன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.

அதேபோல் புங்குடுதீவில் உள்ள மயானங்கள்தொடர்பாக “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” மேற்கொள்ளவுள்ள புனரமைப்பு நடவடிக்கையில் முதலாவதாக “புங்குடுதீவு குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்” வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன. இதன் கிணற்று வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

§§§ “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” புனரமைக்கப்படவுள்ள புங்குடுதீவில் உள்ள மயானங்கள்…

புங்குடுதீவு குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்..
புங்குடுதீவு குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானத்தில் எரிகொட்டகை அமைத்தல், கிணறு அமைத்தல், மண்டபம் புனரமைப்பு போன்ற வேலைகள் நடைபெறவுள்ளன..

புங்குடுதீவு வல்லன் நாவுண்டான்மலை மயானம்..
புங்குடுதீவு வல்லன் நாவுண்டான்மலை மயானத்தில் எரிகொட்டகை அமைத்தல், கிணறு அமைத்தல், மண்டபம் புனரமைப்பு போன்ற வேலைகள் நடைபெறவுள்ளன..

புங்குடுதீவு மணற்காடு (கண்ணகைபுரம்) மயானம்..
புங்குடுதீவு மணற்காடு (கண்ணகைபுரம்) மயானத்தில் எரிகொட்டகை அமைத்தல், கிணறு அமைத்தல் (தற்போதைய கிணறு மூடப்பட்டு உள்ளது), மண்டபம் திருத்தல் போன்ற வேலைகள் நடைபெறவுள்ளன..

புங்குடுதீவு ஊரதீவு கேரதீவு மயானம்..
புங்குடுதீவு ஊரதீவு கேரதீவு மயானத்தில், எரிகொட்டகை அமைத்தல், கிணறு புதுப்பித்தல், மேல்கட்டு கட்டுதல் போன்ற வேலைகள் நடைபெறவுள்ளன..

புங்குடுதீவு இறுப்பிட்டி கேரதீவு மயானம்..
புங்குடுதீவு இறுப்பிட்டி கேரதீவு மயானத்தில், எரிகொட்டகை திருத்தல், கிணறு அமைத்தல், மண்டபம் திருத்தல் போன்ற வேலைகள் நடைபெற தீர்மானித்த போதிலும், மேற்படி மயானத்தை பிறிதோர் அமைப்பு செய்யவுள்ளதாக அறிய தந்ததினால், இம்மயான புனரமைப்பை அவர்களிடமே ஒப்படைத்து உள்ளோம். நன்றி..

“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
24.06.2020

வரலாற்றுப் பெருமை வாய்ந்த மரபுரிமை சின்னமாகிய “புங்குடுதீவு பெருக்குமரம்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − seven =

*