;
Athirady Tamil News

மட்டுநகரில் “புளொட்” அமைப்பின், 31வது வீரமக்கள் தின நிகழ்வு..! (படங்கள்)

0

மட்டுநகரில் “புளொட்” அமைப்பின் 31வது வீரமக்கள் தின நிகழ்வு..! (படங்கள்)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினரால் இன்று 15.07.2020 ம் திகதி 10 மணியளவில் கழகத்தின் மத்தியகுழு உறுப்பினரும், கட்சியின் வேட்பாளருமான மு.ஞானப்பிரகாசம் தலைமையில் நாவற்குடாவில் அமைந்துள்ள கழகத்தின் மாவட்ட காரியாலயத்தில் அனுஸ்ட்டிக்கப்பட்டது. இதன்போது நினைவு சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முக்கிய பிரமுகர்களின் உரையும் நடைபெற்றது.

இந் நிகழ்வில் புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் நிஸ்கானந்தராஜா (சூட்டி), கழகத்தின் உபதலைவரும், மண்முனை மேற்கு பிரதேச சபை உப தவிசாளர் பொ.செல்லத்துரை, ரெலோ அமைப்பின் சார்பில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் இ.பிரசன்னா, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் சார்பில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், போரதீவு பற்று பிரதேச சபை உப தவிசாளர் நா.தர்மலிங்கம், களுவாஞ்சிக்குடி பிரதேச சபை உறுப்பினர் க.சரவணமுத்து, புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்களான மட்டக்களப்பு மாவட்ட நிதி பொறுப்பாளரான ந.ராகவன் , மட்டக்களப்பு மாவட்ட செலாளரான கா.கமலநாதன் (முரளி), க.கிருபைராஜா, மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உபதலைவர் த.விமலனாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உயிர்நீத்த 14 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, மேற்படி “வீரமக்கள் தினத்தை” முன்னிட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னாரில் “புளொட்” அமைப்பின் “வீரமக்கள் தினம்” அனுஸ்டிப்பு..! (படங்கள்)

உலகெங்கும் “புளொட்” அமைப்பின் “வீரமக்கள் தினம்” சுவரொட்டிகள்.. (படங்கள்)

“புளொட்” கிளிநொச்சி தேர்தல் அலுவலக திறப்பும், சூறாவளி பிரச்சாரமும்.. (வீடியோ, படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − eight =

*