;
Athirady Tamil News

“புளொட்” மாணிக்கதாசனின் நினைவாக, மற்றுமோர் வாழ்வாதார உதவி..! (படங்கள்)

0

“புளொட்” மாணிக்கதாசனின் நினைவாக, மற்றுமோர் வாழ்வாதார உதவி..! (படங்கள்)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினம் அடுத்தவாரம் (02.09.2020) புலம்பெயர் “புளொட்” தோழர்களினால் இலங்கையின் வடகிழக்கு பகுதியெங்கும் நினைவு கூறப்பட உள்ளது.

இதன் முதலாவது நடவடிக்கையாக “மாணிக்கதாசன் பவுண்டேசன்” அமைப்பிடம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கழகத் தோழர் பீ.டி.எக்ஸ் எனும் சுப்ரமணியம் ரவிச்சந்திரன் என்பவரின் துணைவியாரான திருமதி.ரவிச்சந்திரன் அவர்களின் நிலையினையைக் கருத்தில் கொண்டு, அவரது வைத்திய செலவுக்கென சுமார் முப்பத்தையாயிரம் ரூபாவினை “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக அமரர் தோழர்.மாணிக்கதாசனின் மைத்துனரான, “புளொட்” லண்டன் (பிரித்தானியா) தோழர் முகுந்தன் (குலம்) அவர்களினால் இன்றையதினம் தோழர் பீ.டி.எக்ஸ் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

தோழர் பீ.டி.எக்ஸ் எனும் சுப்ரமணியம் ரவிச்சந்திரன் “புளொட்” அமைப்பின் நீண்டகாலத் தோழரும், முள்ளிக்குளம், முசல்குத்தி போன்ற பல களங்களில் பங்குபற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது கோரிக்கையை ஏற்று, இவ்வுதவியை உடன் செய்து உதவிய தோழர் முகுந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்… – தலைமையகம், “மாணிக்கதாசன் பவுண்டேசன்”, வவுனியா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − twelve =

*