;
Athirady Tamil News

“புளொட்” தளபதி மாணிக்கதாசனின் நினைவு தினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவி வழங்கல்.. (பகுதி-1) -வீடியோ & படங்கள்-

0

“புளொட்” தளபதி மாணிக்கதாசனின் நினைவு தினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவி வழங்கல்.. (பகுதி-1) -வீடியோ & படங்கள்-

கணவர் கைவிட்ட நிலையில் பிள்ளைகளை பராமரிக்க முடியாமல் அவதிப்பட்ட குடும்பத்துக்கு “புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி வழங்கப்பட்டது.

வவுனியா தம்பனைச்சோலையில் 4 பிள்ளைகளுடன் கணவர் கைவிட்டுப் போன நிலையில் நாளாந்த கூலி வேலை செய்து பிள்ளைகளை படிக்க வைத்து பராமரித்து வரும் சூழ்நிலையில் தற்போது வேலை இல்லாத காரணத்தால், உணவுக்கு மிகவும் சிரமப்பட்ட வேதனையை நாம் கேள்விப்பட்டு, அமரர் தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 21 ஆம் நினவை தினத்தை முன்னிட்டு அந்தக் குடும்பத்திற்கு உணவுப் பொருட்க்கள் அடங்கிய பொதி வழங்கப்பட்டது. அடர்த்த அடைமழையிலும் மேற்படி நிகழ்வுகளை, “புளொட்” தோழர்கள் சார்பாக திரு.மாணிக்கம் ஜெகன் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினம் இன்றையதினம் (02.09.2020) புலம்பெயர் “புளொட்” தோழர்களினால் இலங்கையின் வடகிழக்கு பகுதியெங்கும் நினைவு கூறப்பட்டுள்ளது.

“வீரமக்களாகிய” இவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, “வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கான உதவிகள்” போன்ற பல சமூக நடவடிக்கைகளுக்கான முழுமையான நிதி உதவியை புளொட் சுவிஸ் தோழர்களான செல்வபாலன் (சொலத்தூண்), பாபு (சூரிச்), புவி (சூரிச்), குணசீலன் எனும் குணா (சூரிச்), வரதன் (சூரிச்), குமாரண்ணர் (சூரிச்), ஜெகண்ணர் (சூரிச்),பிரபா (சூரிச்), தேவண்ணர் (கிளாரூஷ்), அசோக் (செங்காளன்), சித்தா (செங்காளன்), ரமணன் (ரப்பேர்ஸ்வில்) ஆகியோருடன், தோழர்.குணபாலன் (கனடா), “மாணிக்கதாசன் பவுண்டேசன்” சார்பாக தோழர்.ரஞ்சன் (சுவிஸ்), தோழர்.தயாளன் (பிரான்ஸ்), தோழர்.ஸ்ரீ எனும் கோபு (கனடா), தோழர்.கோபி (அமெரிக்கா), தோழர்.முகுந்தன் (லண்டன்), தோழர்.சூட்டி எனும் யூட் (ஜெர்மனி) ஆகியோர் பங்களித்து இருந்தனர்.

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

வவுனியாவில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக வாழ்வாதார உதவி வழங்கல்.. (பகுதி-2)

######### வீட்டுக்கூரை மேய, கிடுகு வழங்கப்பட்டது…#######
வவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் கிராமத்தில் வசிக்கும் தாயொருவருக்கு வீடு மேய்வதற்கு கிடுகள் வழங்கப்பட்டது.
அமரர் தளபதி மாணிக்கதாசன் அவர்களது 21ஆம் நினைவு நாளை முன்னிட்டு அவரது  தோழர்களால் வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியெங்கும் பல்வேறு சமுகநல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் பாலமோட்டையில் தனது மகள், பேரப் பிள்ளைகளோடு வசிக்கும் தாயொருவரின் வறுமை நிலையறிந்து அமரர் மாணிக்கதாசண் அவர்களது நினைவாக வீட்டுக்கு போதுமான கிடுகுகள் வழங்கப்பட்டது. அடர்த்த அடைமழையிலும் “புளொட்” தோழர்கள் சார்பாக, மேற்படி நிகழ்வுகளை திரு.மாணிக்கம் ஜெகன் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினம் இன்றையதினம் (02.09.2020) புலம்பெயர் “புளொட்” தோழர்களினால் இலங்கையின் வடகிழக்கு பகுதியெங்கும் நினைவு கூறப்பட்டுள்ளது.

“வீரமக்களாகிய” இவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, “வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கான உதவிகள்” போன்ற பல சமூக நடவடிக்கைகளுக்கான முழுமையான நிதி உதவியை புளொட் சுவிஸ் தோழர்களான செல்வபாலன் (சொலத்தூண்), பாபு (சூரிச்), புவி (சூரிச்), குணசீலன் எனும் குணா (சூரிச்), வரதன் (சூரிச்), குமாரண்ணர் (சூரிச்), ஜெகண்ணர் (சூரிச்),பிரபா (சூரிச்), தேவண்ணர் (கிளாரூஷ்), அசோக் (செங்காளன்), சித்தா (செங்காளன்), ரமணன் (ரப்பேர்ஸ்வில்) ஆகியோருடன், தோழர்.குணபாலன் (கனடா), “மாணிக்கதாசன் பவுண்டேசன்” சார்பாக தோழர்.ரஞ்சன் (சுவிஸ்), தோழர்.தயாளன் (பிரான்ஸ்), தோழர்.ஸ்ரீ எனும் கோபு (கனடா), தோழர்.கோபி (அமெரிக்கா), தோழர்.முகுந்தன் (லண்டன்), தோழர்.சூட்டி எனும் யூட் (ஜெர்மனி) ஆகியோர் பங்களித்து இருந்தனர்.

“புளொட்” தோழர் மாணிக்கதாசனின் 21 வது நினைவுதின உதவிகள் வழங்கல் ஆரம்பம்… வவுனியா, மன்னார் மட்டக்களப்பில் தொடரும் உதவிகள் நாளைமறுதினம் வரை தொடரும்..

“புளொட்” தளபதி மாணிக்கதாசனின் நினைவு தினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவி வழங்கல்.. (பகுதி-1) -வீடியோ & படங்கள்-

“புளொட்” தளபதி மாணிக்கதாசனின் நினைவு தினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவி வழங்கல்.. (பகுதி-2) -வீடியோ & படங்கள்-

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*