மட்டக்களப்பில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, “பாதணிகள் & கற்றல் உபகரணங்கள்” வழங்கல்..! (வீடியோ & படங்கள்)

மட்டக்களப்பில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக “கற்றல் உபகரணங்கள்” வழங்கல்..! (வீடியோ & படங்கள்)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினம் இன்றையதினம் (02.09.2020) புலம்பெயர் “புளொட்” தோழர்களினால் இலங்கையின் வடகிழக்கு பகுதியெங்கும் நினைவு கூறப்பட்டுள்ளது.
இந்தவகையில், புலம்பெயர் “புளொட்” தோழர்களின் பங்களிப்பில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” அமைப்பின் ஏற்பாட்டில் மட். கரையாக்கந்தீவு விநாயகர் பாலர் பாடசாலைக்கான கற்றல் உபகரணங்களும், மாணவர்களுக்கான பாதணிகள் (காலுறையுடன் தரமான காலணி -ஷூ & சாக்ஸ்-) வழங்கும் நிகழ்வானது, “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், மண்முனை மேற்கு பிரதேச சபை உப தவிசாளர் செல்லத்துரை (கேசவன்), “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், மட் மாநகர சபை உறுப்பினருமான நிஸ்கானந்தராஜா(சூட்டி), “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் முரளி ஆகியோரின் பங்குபற்றலுடன் இன்று 02/09/2020 காலை இடம்பெற்று பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் கிராம உத்தியோகஸ்தர், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இதற்கான நிதியினை வழங்கிய புலம்பெயர் “புளொட்” உறுப்பினர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என பயனாளிகளினால் தெரிவிக்கப்பட்டது.
“வீரமக்களாகிய” இவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, “வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கான உதவிகள்” போன்ற பல சமூக நடவடிக்கைகளுக்கான முழுமையான நிதி உதவியை புளொட் சுவிஸ் தோழர்களான செல்வபாலன் (சொலத்தூண்), பாபு (சூரிச்), புவி (சூரிச்), குணசீலன் எனும் குணா (சூரிச்), வரதன் (சூரிச்), குமாரண்ணர் (சூரிச்), ஜெகண்ணர் (சூரிச்),பிரபா (சூரிச்), தேவண்ணர் (கிளாரூஷ்), அசோக் (செங்காளன்), சித்தா (செங்காளன்), ரமணன் (ரப்பேர்ஸ்வில்) ஆகியோருடன், தோழர்.குணபாலன் (கனடா), தோழர்.பாலா (லண்டன்), “மாணிக்கதாசன் பவுண்டேசன்” சார்பாக தோழர்.ரஞ்சன் (சுவிஸ்), தோழர்.தயாளன் (பிரான்ஸ்), தோழர்.ஸ்ரீ எனும் கோபு (கனடா), தோழர்.கோபி (அமெரிக்கா), தோழர்.முகுந்தன் (லண்டன்), தோழர்.சூட்டி எனும் யூட் (ஜெர்மனி) ஆகியோர் பங்களித்து இருந்தனர்.
தகவல்.. “தலைமையகம், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” வவுனியா.
காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (இருபத்தோராவது நினைவு தினம்)