“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசன் நினைவாக, வவுனியா எங்கும் சுவரொட்டிகள்..! (படங்கள்)

“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசன் நினைவாக வவுனியா எங்கும் சுவரொட்டிகள்..! (படங்கள்)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினம் இன்றையதினம் (02.09.2020) புலம்பெயர் “புளொட்” தோழர்களினால் இலங்கையின் வடகிழக்கு பகுதியெங்கும் நினைவு கூறப்பட்டது.
இதேவேளை அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினத்தை முன்னிட்டு, அவர்களின் குடும்ப உறவுகள், நண்பர்கள், புளொட் தோழர்களினால் “நினைவுதின சுவரொட்டி” பிரசுரிக்கப்பட்டு, வவுனியாவின் பலபகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டு உள்ளது.
காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (இருபத்தோராவது நினைவு தினம்)