;
Athirady Tamil News

மன்னாரில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, கற்றல் உபகரணங்கள் வழங்கல்..! (படங்கள்)

0

மன்னாரில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, கற்றல் உபகரணங்கள் வழங்கல்..! (படங்கள்)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினம் இன்றையதினம் (02.09.2020) புலம்பெயர் “புளொட்” தோழர்களினால் இலங்கையின் வடகிழக்கு பகுதியெங்கும் நினைவு கூறப்பட்டுள்ளது.

இந்தவகையில், புலம்பெயர் “புளொட்” தோழர்களின் பங்களிப்பில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் ஆத்திமோட்டை பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சீதுவிநாயகர்குளம் கிராமத்தில் உள்ள சுமார் அறுபது மாணவ, மாணவிகளுக்கான (பாலர் வகுப்பு முதல் தரம் பன்னிரண்டு வரை கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. சில மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில், அவர்களின் பெற்றோர், உறவினர்கள் “கற்றல் உபகரணங்களை” பெற்றுக் கொண்டனர்.

மேற்படி ஆத்திமோட்டை பிரதேசத்தில் சீதுவிநாயகர்குளம் கிராமத்தில் உள்ள “சுகன் முன்பள்ளி” ஆசிரியை திருமதி. சுதாகர் கோபிஷாலினி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

மேற்படிக் கிராம மாணவ மாணவிகளுக்கான “கற்றல் உபகரணம்” வழங்கும் நிகழ்வானது “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், மன்னார் மாவட்ட அமைப்பாளருமான அந்தோனிப்பிள்ளை (கொன்ஸால்ட்) அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது.  இவருடன் “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மன்னார் மாவடட செயலாளருமான தோழர் ஜேம்ஸ், சுகன் முன்பள்ளி” ஆசிரியை திருமதி. சுதாகர் கோபிஷாலினி ஆகியோரின் பங்குபற்றலுடன் இன்று 02/09/2020 காலை 9.30 மணியளவில் இடம்பெற்று “கற்றல் உபகரணங்கள்” வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் மாணவ மாணவிகளுடன் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இதற்கான நிதியினை வழங்கிய புலம்பெயர் “புளொட்” உறுப்பினர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என பயனாளிகளினால் தெரிவிக்கப்பட்டது.

“வீரமக்களாகிய” இவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, “வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கான உதவிகள்” போன்ற பல சமூக நடவடிக்கைகளுக்கான முழுமையான நிதி உதவியை புளொட் சுவிஸ் தோழர்களான செல்வபாலன் (சொலத்தூண்), பாபு (சூரிச்), புவி (சூரிச்), குணசீலன் எனும் குணா (சூரிச்), வரதன் (சூரிச்), குமாரண்ணர் (சூரிச்), ஜெகண்ணர் (சூரிச்),பிரபா (சூரிச்), தேவண்ணர் (கிளாரூஷ்), அசோக் (செங்காளன்), சித்தா (செங்காளன்), ரமணன் (ரப்பேர்ஸ்வில்) ஆகியோருடன், தோழர்.குணபாலன் (கனடா), தோழர்.பாலா (லண்டன்), “மாணிக்கதாசன் பவுண்டேசன்” சார்பாக தோழர்.ரஞ்சன் (சுவிஸ்), தோழர்.தயாளன் (பிரான்ஸ்), தோழர்.ஸ்ரீ எனும் கோபு (கனடா), தோழர்.கோபி (அமெரிக்கா), தோழர்.முகுந்தன் (லண்டன்), தோழர்.சூட்டி எனும் யூட் (ஜெர்மனி) ஆகியோர் பங்களித்து இருந்தனர்.

தகவல்.. “தலைமையகம், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” வவுனியா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*