“புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, “உமாமகேஸ்வரன் பவுண்டேஷனில்” நிகழ்வு..! (படங்கள்)

“புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, “உமாமகேஸ்வரன் பவுண்டேஷனில்” நிகழ்வு..! (படங்கள்)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினம் இன்றையதினம் (02.09.2020) புலம்பெயர் “புளொட்” தோழர்களினால் இலங்கையின் வடகிழக்கு பகுதியெங்கும் நினைவு கூறப்பட்டது.
இதேவேளை அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினத்தை முன்னிட்டு, “உமாமகேஸ்வரன் பவுண்டேசன்” வவுனியா காரியாலயத்தில், “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், உபதலைவர்களில் ஒருவருமான தோழர் விசு தலைமையில் நினைவு சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கழகத் தோழர்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (இருபத்தோராவது நினைவு தினம்)
“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசன் நினைவாக, வவுனியா எங்கும் சுவரொட்டிகள்..! (படங்கள்)
மன்னாரில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, கற்றல் உபகரணங்கள் வழங்கல்..! (படங்கள்)