;
Athirady Tamil News

“புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, “புதிய கற்பகபுரம் பாலர் பாடசாலை” மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.. (வீடியோ & படங்கள்)

0

“புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, புதிய கற்பகபுரம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.. (வீடியோ & படங்கள்)

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் மற்றும் அவருடன் மரணித்த தோழர்களின் நினைவாக புதிய கற்பகபுரம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா பதிய கற்பகபுரமானது புதிதாக மீள்குடியேற்றப்பட்ட கிராமமாகும், அனேக மக்களின் வாழ்வாதாரம் நாளாந்த கூலித் தொழிலாகும். மிகக்குறைந்த வசதியுடன் இயங்கி வருகின்ற பாலர் பாடசாலையில் 40 பிள்ளைகள் கல்வி கற்று வருகின்றனர்.

அவர்களது நிலமையை கருத்திற் கொண்டு மாணிக்கதாசன் அவர்களினதும் அவருடன் மரணித்த தோழர்களின் நினைவாகவும் அவர்களின் இருபத்தோராவது நினைநினைவுநாளை முன்னிட்டு மாணவர்களது விருப்பத்திற்கமைய கொப்பிகள், கலர் பெட்டி, தண்ணீர்ப் போத்தல், உணவு பாதுகாப்பு பெட்டி, என “கற்றல் உபகரணங்கள்” அடங்கிய பொதி வழங்கப்பட்டது. சில மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில், அவர்களின் பெற்றோர், உறவினர்கள் “கற்றல் உபகரணங்களை” பெற்றுக் கொண்டனர்.

அடர்த்த அடைமழையிலும் “புளொட்” தோழர்கள் சார்பாக, மேற்படி நிகழ்வுகளை திரு.மாணிக்கம் ஜெகன் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார். இந்நிகழ்வுக்கு முன்பள்ளி ஆசிரியைகள் பெற்றோர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பயனாளிகளினால் நிதி உதவியளித்த புலம்பெயர் “புளொட்” தோழர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினம் இன்றையதினம் (02.09.2020) புலம்பெயர் “புளொட்” தோழர்களினால் இலங்கையின் வடகிழக்கு பகுதியெங்கும் நினைவு கூறப்பட்டுள்ளது.

“வீரமக்களாகிய” இவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, “வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கான உதவிகள்” போன்ற பல சமூக நடவடிக்கைகளுக்கான முழுமையான நிதி உதவியை புளொட் சுவிஸ் தோழர்களான செல்வபாலன் (சொலத்தூண்), பாபு (சூரிச்), புவி (சூரிச்), குணசீலன் எனும் குணா (சூரிச்), வரதன் (சூரிச்), குமாரண்ணர் (சூரிச்), ஜெகண்ணர் (சூரிச்),பிரபா (சூரிச்), தேவண்ணர் (கிளாரூஷ்), அசோக் (செங்காளன்), சித்தா (செங்காளன்), ரமணன் (ரப்பேர்ஸ்வில்) ஆகியோருடன், தோழர்.குணபாலன் (கனடா), தோழர்.பாலா (லண்டன்), “மாணிக்கதாசன் பவுண்டேசன்” சார்பாக தோழர்.ரஞ்சன் (சுவிஸ்), தோழர்.தயாளன் (பிரான்ஸ்), தோழர்.ஸ்ரீ எனும் கோபு (கனடா), தோழர்.கோபி (அமெரிக்கா), தோழர்.முகுந்தன் (லண்டன்), தோழர்.சூட்டி எனும் யூட் (ஜெர்மனி) ஆகியோர் பங்களித்து இருந்தனர்.

தகவல்.. “தலைமையகம், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” வவுனியா.  

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (இருபத்தோராவது நினைவு தினம்)

“புளொட்” தளபதி மாணிக்கதாசனின் நினைவு தினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவி வழங்கல்.. (பகுதி-1) -வீடியோ & படங்கள்-

“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசன் நினைவாக, வவுனியா எங்கும் சுவரொட்டிகள்..! (படங்கள்)

மட்டக்களப்பில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, “பாதணிகள் & கற்றல் உபகரணங்கள்” வழங்கல்..! (வீடியோ & படங்கள்)

மன்னாரில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, கற்றல் உபகரணங்கள் வழங்கல்..! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 16 =

*