“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, மணிப்புரம் ஆனந்த இல்லத்துக்கு மூவேளை உணவு.. (படங்கள் & வீடியோ)

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, மணிப்புரம் ஆனந்த இல்லத்துக்கு மூவேளை உணவு.. (படங்கள் & வீடியோ)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினம் இன்றையதினம் (02.09.2020) புலம்பெயர் “புளொட்” தோழர்களினால் இலங்கையின் வடகிழக்கு பகுதியெங்கும் நினைவு கூறப்பட்டுள்ளது.
இதன் ஒருகட்டமாக, வவுனியா மணிப்பரத்தில் மனநலம்குன்றிய மற்றும் உறவுகளால் பராமரிப்பின்றி கைவிடப்பட்டோருக்கு அடைக்கலமாக பாதுகாப்பதுக்கென கடந்த அரசாங்க அமைச்சர் திரு சுவாமிநாதன் அவர்களால் அமைக்கப்பட்டது ஆனந்த இல்லமாகும். இலங்கையின் பல்வேறு பிரதேசத்திலிருந்து பலர் இங்கு வந்து தங்கி சுகமாக வீடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறான ஆனந்த இல்லத்தில் வாழும் அன்னையர்களுக்கு அமரர் மாணிக்கதாசன் அவர்களது 21ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விசேடமாக அவர்கள் விருப்பத்திற்கேற்ப மூன்றுவேளை விசேட உணவுகள் இன்றையதினம் வழங்கப்பட்டது. அடர்த்த அடைமழையிலும் மேற்படி நிகழ்வுகளை, “புளொட்” தோழர்கள் சார்பாக திரு.மாணிக்கம் ஜெகன் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்.
தாயகப் பகுதியெங்கும் “புளொட்” அமைப்பின் இராணுவத்தளபதி தோழர்.மாணிக்கதாசனினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்களினதும் நினைவுகூரல், புலம்பெயர் “புளொட்” தோழர்களின் நிதிப்பங்களிப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது வாழ்வாதார உதவி, பாடசாலை மாணவ மாணவியர்களுக்கான “கற்றல் உபகரணங்கள்”, ஆதரவற்ற இல்லங்களுக்கு உணவு வழங்கள் போன்ற மக்கள் நலத் தொண்டுகள் அன்னாரது சுவிஸ் தோழர்களினாலும், புலம்பெயர்ந்து வாழும் புளொட் தோழர்களினாலும் செய்யப்பட்டு வருகிறது. தாயக விடுதலைக்காக தம்முயிர் தந்த விடுதலை தோழமை செல்வங்களுக்கு வீரமிகு அஞ்சலிகள்.
காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (இருபத்தோராவது நினைவு தினம்)
“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசன் நினைவாக, வவுனியா எங்கும் சுவரொட்டிகள்..! (படங்கள்)
மன்னாரில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, கற்றல் உபகரணங்கள் வழங்கல்..! (படங்கள்)