“புளொட்” தோழர்.இளங்கோவின் நினைவிடமும், பேருந்து நிலையமும் புனருத்தாணம்..! (படங்கள்)
“புளொட்” தோழர்.இளங்கோவின் நினைவிடமும், பேருந்து நிலையமும் புனருத்தாணம்..! (படங்கள்)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினம் நேற்றையதினம் (02.09.2020) புலம்பெயர் “புளொட்” தோழர்களினால் இலங்கையின் வடகிழக்கு பகுதியெங்கும் நினைவு கூறப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே. ரஞ்சன்
கடந்த 02.09.1999 அன்று புளொட் அமைப்பின் வவுனியாவில் அமைந்திருந்த காரியாலயமான “லக்கி ஹவுசில்” வைத்து “பாசிச சக்திகளினால்” நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட மேற்படித் தோழர்களில் ஒருவரான, தோழர்.இளங்கோ அவர்களின் நினைவாக 2015ம் ஆண்டில் வவுனியாவில் திருநாவற்கும் முதலாவது ஒழுங்கையில், அவரது மருமகனான தோழர்.ரமணனின் (சுவிஸ்) நிதியுதவியில், தோழர்.காண்டீபனின் (வவுனியா) மேற்பார்வையில் பேரூந்து நிலையம் ஒன்று கட்டப்பட்டு “புளொட்” தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
மேற்படித் தோழர்களின் இருபத்தோராவது (நேற்றையதினம்) நினைவு தினத்தையொட்டி, மேற்படி சம்பவத்தில் பலியாகியவர்களில் ஒருவரான தோழர்.இளங்கோவின் குடும்ப உறவுகளினாலும், புளொட் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் வழிகாட்டலில், நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் மேற்பார்வையில், இளைஞரணி அமைப்பாளர் கெர்சோன் கரிஸ் ஒழுங்கமைப்பில், புளொட் இளைஞரணியால் புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
தோழர்.இளங்கோவின் வித்துடல் விதையாக்கப்பட்ட நினைவிடமும், மேற்படிப் பேரூந்து நிலையமும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல்… “குடும்ப உறவுகள்”
காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (இருபத்தோராவது நினைவு தினம்)
“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசன் நினைவாக, வவுனியா எங்கும் சுவரொட்டிகள்..! (படங்கள்)
மன்னாரில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, கற்றல் உபகரணங்கள் வழங்கல்..! (படங்கள்)
“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, மணிப்புரம் ஆனந்த இல்லத்துக்கு மூவேளை உணவு.. (படங்கள் & வீடியோ)