“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, “கற்குழி ஞானம் முன்பள்ளிக்கு” நிதியுதவி.. (படங்கள் & வீடியோ)

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, “கற்குழி ஞானம் முன்பள்ளிக்கு” நிதியுதவி.. (படங்கள் & வீடியோ)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினம் இன்றையதினம் (02.09.2020) புலம்பெயர் “புளொட்” தோழர்களினால் இலங்கையின் வடகிழக்கு பகுதியெங்கும் நினைவு கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பித்துள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக “கை கழுவுதல் சுகாதார தேவை” முக்கியமாக கருதப்பட்டது. இதற்காக கைகழுவும் பேசன் கிடைக்கப் பெற்று பொருத்தப்பட்டது. இதன் போது இதனால் கழிவுநீர் வெளியேற வேண்டிய தேவைக்கான வசதி இன்மையினால் பாலர் பாடசாலை ஆரம்பிப்பதில் தடை,தாமதம் உண்டாகியது.
இதை கேள்விப்பட்டு “எதிர்கால கல்வி மேம்பாடானது, இம்மண்ணின் தனித்துவமானது” என்ற அடிப்படையில் “புளொட்” தளபதி அமரர் மாணிக்கதாசன் மற்றும் தோழர்கள் இளங்கோ, வினோ அவர்களது 21 ஆம் நினைவுநாளை முன்னிட்டு “கழிவுநீர் வெளியேற்ற வடிகால் அமைப்பின் முழுமையாக பூர்த்தி செய்வதற்கான” முழுத் தொகையினை சுவிஸ் வாழ் புளொட் தோழர்களினால் இன்று கற்குழி முன்பள்ளி மண்டபத்தில் ஆசிரியையிடம் வழங்கப்பட்டது. “புளொட்” தோழர்கள் சார்பாக திரு.மாணிக்கம் ஜெகன் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்.
இதன்போது மாவட்ட முன்பள்ளி இணைப்பாளர் திருமதி அருளவேலநாயகி அவர்களும் பிரசன்னமாயிருந்தார். அவர்களுடன் மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் சமுகமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“வீரமக்களாகிய” இவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, “வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கான உதவிகள்” போன்ற பல சமூக நடவடிக்கைகளுக்கான முழுமையான நிதி உதவியை புளொட் சுவிஸ் தோழர்களான செல்வபாலன் (சொலத்தூண்), பாபு (சூரிச்), புவி (சூரிச்), குணசீலன் எனும் குணா (சூரிச்), வரதன் (சூரிச்), குமாரண்ணர் (சூரிச்), ஜெகண்ணர் (சூரிச்),பிரபா (சூரிச்), தேவண்ணர் (கிளாரூஷ்), அசோக் (செங்காளன்), சித்தா (செங்காளன்), ரமணன் (ரப்பேர்ஸ்வில்) ஆகியோருடன், தோழர்.குணபாலன் (கனடா), தோழர்.பாலா (லண்டன்), “மாணிக்கதாசன் பவுண்டேசன்” சார்பாக தோழர்.ரஞ்சன் (சுவிஸ்), தோழர்.தயாளன் (பிரான்ஸ்), தோழர்.ஸ்ரீ எனும் கோபு (கனடா), தோழர்.கோபி (அமெரிக்கா), தோழர்.முகுந்தன் (லண்டன்), தோழர்.சூட்டி எனும் யூட் (ஜெர்மனி) ஆகியோர் பங்களித்து இருந்தனர்.
காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (இருபத்தோராவது நினைவு தினம்)
“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசன் நினைவாக, வவுனியா எங்கும் சுவரொட்டிகள்..! (படங்கள்)
மன்னாரில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, கற்றல் உபகரணங்கள் வழங்கல்..! (படங்கள்)
“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, மணிப்புரம் ஆனந்த இல்லத்துக்கு மூவேளை உணவு.. (படங்கள் & வீடியோ)
“புளொட்” தோழர்.இளங்கோவின் நினைவிடமும், பேருந்து நிலையமும் புனருத்தாணம்..! (படங்கள்)