;
Athirady Tamil News

“புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, திருநாவற்குளம் கிராமத்தில் சிறப்பு நிகழ்வுகள்..! (படங்கள்)

0

“புளொட்” மாணிக்கதாசன் நினைவாக திருநாவற்குளம் கிராமத்தில் சிறப்பு நிகழ்வுகள்.,! (படங்கள்)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினம் இன்றையதினம் (02.09.2020) புலம்பெயர் “புளொட்” தோழர்களினால் இலங்கையின் வடகிழக்கு பகுதியெங்கும் நினைவு கூறப்பட்டுள்ளது.

இதன் ஒருகட்டமாக, புலம்பெயர் “புளொட்” தோழர்களின் பங்களிப்பில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” அமைப்பின் ஏற்பாட்டில், வவுனியா திருநாவற்குளம் “உமா மகேஸ்வரன் முன்பள்ளி”யில் நேற்றையதினம் “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.

அஞ்சலி உரைகளுடன் முன்பள்ளி மற்றும் தரம் 10-11 மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஆற்றலரசி குழுமத்திற்கு அவர்களின் பயிற்சி, உபகரண திருத்தத்திற்காக சிறு நிதி உதவித்தொகையும் அன்பளிப்பு செய்யப்பட்டது.

மேற்படி நிகழ்வில் “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகரசபையின் கௌரவ உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன், தோழர் இளங்கோவின் மகன் மற்றும் சகோதரிகள், மறைந்த தோழர்களின் உறவுகள், ஆற்றலரசி குழும உறுப்பினர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தார்கள்.

இந் நிகழ்வில் மாணவ மாணவிகளுடன் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இதற்கான நிதியினை வழங்கிய புலம்பெயர் “புளொட்” உறுப்பினர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என பயனாளிகளினால் தெரிவிக்கப்பட்டது.

“வீரமக்களாகிய” இவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, “வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கான உதவிகள்” போன்ற பல சமூக நடவடிக்கைகளுக்கான முழுமையான நிதி உதவியை புளொட் சுவிஸ் தோழர்களான செல்வபாலன் (சொலத்தூண்), பாபு (சூரிச்), புவி (சூரிச்), குணசீலன் எனும் குணா (சூரிச்), வரதன் (சூரிச்), குமாரண்ணர் (சூரிச்), ஜெகண்ணர் (சூரிச்),பிரபா (சூரிச்), தேவண்ணர் (கிளாரூஷ்), அசோக் (செங்காளன்), சித்தா (செங்காளன்), ரமணன் (ரப்பேர்ஸ்வில்) ஆகியோருடன், தோழர்.குணபாலன் (கனடா), தோழர்.பாலா (லண்டன்), “மாணிக்கதாசன் பவுண்டேசன்” சார்பாக தோழர்.ரஞ்சன் (சுவிஸ்), தோழர்.தயாளன் (பிரான்ஸ்), தோழர்.ஸ்ரீ எனும் கோபு (கனடா), தோழர்.கோபி (அமெரிக்கா), தோழர்.முகுந்தன் (லண்டன்), தோழர்.சூட்டி எனும் யூட் (ஜெர்மனி) ஆகியோர் பங்களித்து இருந்தனர்.

தகவல்.. “தலைமையகம், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” வவுனியா.

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (இருபத்தோராவது நினைவு தினம்)

“புளொட்” தளபதி மாணிக்கதாசனின் நினைவு தினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவி வழங்கல்.. (பகுதி-1) -வீடியோ & படங்கள்-

மட்டக்களப்பில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, “பாதணிகள் & கற்றல் உபகரணங்கள்” வழங்கல்..! (வீடியோ & படங்கள்)

“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசன் நினைவாக, வவுனியா எங்கும் சுவரொட்டிகள்..! (படங்கள்)

மன்னாரில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, கற்றல் உபகரணங்கள் வழங்கல்..! (படங்கள்)

“புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, “புதிய கற்பகபுரம் பாலர் பாடசாலை” மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.. (வீடியோ & படங்கள்)

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, மணிப்புரம் ஆனந்த இல்லத்துக்கு மூவேளை உணவு.. (படங்கள் & வீடியோ)

“புளொட்” தோழர்.இளங்கோவின் நினைவிடமும், பேருந்து நிலையமும் புனருத்தாணம்..! (படங்கள்)

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, “கற்குழி ஞானம் முன்பள்ளிக்கு” நிதியுதவி.. (படங்கள் & வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − eleven =

*