;
Athirady Tamil News

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, “உலருணவுப் பொதி மற்றும் பணவுதவி” வழங்கல்..! (வீடியோ & படங்கள்)

0

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, உலருணவுப் பொதி மற்றும் பணவுதவி வழங்கல்..! (வீடியோ & படங்கள்)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினம் நேற்றுமுன்தினம் (02.09.2020) புலம்பெயர் “புளொட்” தோழர்களினால் இலங்கையின் வடகிழக்கு பகுதியெங்கும் நினைவு கூறப்பட்டு வருகின்றது.

இதன் அடுத்த நடவடிக்கையாக இன்றையதினம், வவுனியா வடக்கு பிரதேச பரசங்குளம் லைக்கா குடியிருப்பில் வாழும் விபத்தொன்றில் பாதிக்கப்பட்டு தொழில் வாய்ப்பிழந்த குடும்பத்தின் நிலையறிந்து அமரர் மாணிக்கதாசன் அவர்களின் 21 ஆம் நினைவு நாளை முன்னிட்டு உலருணவுப் பொதி மற்றும் பணவுதவி வழங்கப்பட்டது.

நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில், கணவர் தொழில் செய்ய இயலாத காரணத்தால், தாய் நாளாந்த கூலி வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்றி வருகின்றார். இவ்வாறான நிலையில் இவர்களது நிலையறிந்து, அவர்களின் வேண்டுகோளை ஏற்று “புளொட்” தளபதி மாணிக்கதாசன் மற்றும் தோழர்கள் இளங்கோ, வினோ அவர்களது 21 ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு உலருணவுப் பொதியும் பணவுதவியும் கொடுக்கப்பட்டது. இன்று இவர்களது இல்லத்துக்கு சென்று புளொட் தோழர்களால் வழங்கிய உதவிகள், திரு.மாணிக்கம் ஜெகன் அவர்களால் கொடுக்கப்பட்டது.

அதேபோல் இன்றுமதியம் கழகத்தோழர் ஒருவரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சிறுதொகை நிதியும் வழங்கப்பட்டது.

தமிழர் தாயகப் பகுதியெங்கும் இவ்வாறான “வாழ்வாதார உதவிகள், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், பராமரிப்பு இல்லங்களுக்கான உணவு வழங்கள், வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள், பாலர் பாடசாலைகளுக்கான உதவிகள்” என பல்வேறுபட்ட சமுகநல தொண்டுகள் “புளொட்” தோழர்களினால் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

“வீரமக்களாகிய” இவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, “வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கான உதவிகள்” போன்ற பல சமூக நடவடிக்கைகளுக்கான முழுமையான நிதி உதவியை புளொட் சுவிஸ் தோழர்களான செல்வபாலன் (சொலத்தூண்), பாபு (சூரிச்), புவி (சூரிச்), குணசீலன் எனும் குணா (சூரிச்), வரதன் (சூரிச்), குமாரண்ணர் (சூரிச்), ஜெகண்ணர் (சூரிச்),பிரபா (சூரிச்), தேவண்ணர் (கிளாரூஷ்), அசோக் (செங்காளன்), சித்தா (செங்காளன்), ரமணன் (ரப்பேர்ஸ்வில்) ஆகியோருடன், தோழர்.குணபாலன் (கனடா), தோழர்.பாலா (லண்டன்), “மாணிக்கதாசன் பவுண்டேசன்” சார்பாக தோழர்.ரஞ்சன் (சுவிஸ்), தோழர்.தயாளன் (பிரான்ஸ்), தோழர்.ஸ்ரீ எனும் கோபு (கனடா), தோழர்.கோபி (அமெரிக்கா), தோழர்.முகுந்தன் (லண்டன்), தோழர்.சூட்டி எனும் யூட் (ஜெர்மனி) ஆகியோர் பங்களித்து இருந்தனர்.

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (இருபத்தோராவது நினைவு தினம்)

“புளொட்” தளபதி மாணிக்கதாசனின் நினைவு தினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவி வழங்கல்.. (பகுதி-1) -வீடியோ & படங்கள்-

மட்டக்களப்பில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, “பாதணிகள் & கற்றல் உபகரணங்கள்” வழங்கல்..! (வீடியோ & படங்கள்)

“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசன் நினைவாக, வவுனியா எங்கும் சுவரொட்டிகள்..! (படங்கள்)

மன்னாரில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, கற்றல் உபகரணங்கள் வழங்கல்..! (படங்கள்)

“புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, “புதிய கற்பகபுரம் பாலர் பாடசாலை” மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.. (வீடியோ & படங்கள்)

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, மணிப்புரம் ஆனந்த இல்லத்துக்கு மூவேளை உணவு.. (படங்கள் & வீடியோ)

“புளொட்” தோழர்.இளங்கோவின் நினைவிடமும், பேருந்து நிலையமும் புனருத்தாணம்..! (படங்கள்)

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, “கற்குழி ஞானம் முன்பள்ளிக்கு” நிதியுதவி.. (படங்கள் & வீடியோ)

“புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, திருநாவற்குளம் கிராமத்தில் சிறப்பு நிகழ்வுகள்..! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*