;
Athirady Tamil News

“வரலாற்று நினைவுகள்”.. புளொட் படைத்துறைச் செயலர், அரசியல் செயலர் உள்ளிட்டோரின் நினைவுதினம்..! (வீடியோ)

0

“வரலாற்று நினைவுகள்”.. புளொட் படைத்துறைச் செயலர், அரசியல் செயலர் உள்ளிட்டோரின் நினைவுதினம் இன்றாகும்..!

கடந்த 13.09.1987ல் மட்டக்களப்பு வாழைச்சேனை கிரான் பிரதேசத்தில் இடம்பெற்ற ஏகப் பிரதிநிதித்துவத்திற்கான படுகொலையில் உயிர்நீத்த கழகத்தின் படைத்துறைச் செயலர் சோதீஸ்வரன் (கண்ணன்), அரசியல்துறை செயலர் இரா.வாசுதேவா (வாசு) மற்றும் கழக முக்கியஸ்தர்கள் மற்றும் சிரேஸ்ட உறுப்பினர்களான பவானந்தன் (சுபாஸ்), மணிவண்ணன் (ஆனந்தன்), ஹரிகரன்(ஈழமகிந்தன்), நிக்லஸ், மைக்கல், கணேஸ்(செல்வம்) ரஞ்சித், மணிமாறன், எஸ்.ஏ.ரவி, நவரட்ணம் சண்முகநாதன் (ராஜன்) உள்ளிட்ட தோழர்களின் 33ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று ஆகும்.

பேச்சுவார்த்தை என்று அழைக்கபட்டு புலிகளால் நயவஞ்சமாக படுகொலை செய்யப்பட்ட புளொட் உறுப்பினர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியற் செயலாளர் வாசுதேவா (வாசு -கோவிந்தன் வீதி மட்டக்களப்பு), படைத்துறைச் செயலாளர் ஜோதீஸ்வரன் (கண்ணன் -சுழிபுரம்), பவானந்தன் (சுபாஸ் -சந்திவெளி), ஆனந்தன்-மணிவண்ணன்(மூளாய்), ஹரிஹரன் -ஈழமைந்தன்(பழுகாமம்), சீனித்தம்பி நிக்ளஸ்(ஆரையம்பதி), செல்வம் -கணேஸ்(சந்திவெளி), ரஞ்சித்(சந்திவெளி), மணிமாறன்(புல்லுவலை), கண்ணன்(கல்குடா), எஸ்.ஏ.ரவி (சந்திவெளி), நவரட்ணம் சண்முகநாதன் (ராஜன் -வல்வெட்டித்துறை), ஜெகன்(ஓமந்தை), செல்வம்-நாகேந்திரன்(சந்தாவெளி), சின்னமெண்டிஸ் (இருதயபுரம்), பாலன்(செங்கலடி), சாந்தன் (வாழைச்சேனை), சங்கரப்பிள்ளை-மைக்கல் (நாவற்குடா) உட்பட்டோரின் 33ம் ஆண்டு நினைவுநாள்.

1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ம் திகதி காலை புளொட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களான வாசுதேவா, கண்ணன், சிவராம் (தராக்கி), ஆகியோர்கள் தங்கியிருந்த வாசுதேவாவின் அக்கா வீட்டிற்கு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான பொட்டம்மான், கருணா (ஸ்ரீலங்கா அரசின் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்), கரிகாலன், சித்தா உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் புளொட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி காலை உணவினை வாசுதேவாவின் சகோதரியின் இல்லத்தில் ஒன்றாக இருந்து அருந்தி மத்தியானச் சாப்பாட்டிற்கு தங்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து கைகுலுக்கி சென்ற புலிகளின் நயவஞ்சகத் தன்மையை அறிந்திராத புளொட் அமைப்பினர் மத்தியானம் சாப்பாட்டிற்கு வருவதற்கு ஒப்புதலும் வழங்கினார்கள்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாகத் தன்னும் அனைத்து இயக்கங்களும் ஒண்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்த புளொட் இயக்கத்தினர் ஒற்றுமை என்ற போர்வையில் தமிழீழ விடுதலை இயக்க தலைவர் சிறீ சபாரத்தினத்திற்கு நேர்ந்த நிலைமையை உணராமல் போனது வேதனையான விடயமே.

இந்தத் தருணத்தில் புலிகளை முழுமையாக நம்பமுடியாது பாதுகாப்பிற்காகத் தன்னும் சில ஆயுதங்களையும் தொலைத்தொடர்பு சாதனங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என வற்புறுத்திய ஆலோசனையும், வாசுதேவாவின் “புலிகள் அப்படி செய்ய மாட்டார்கள்” என்ற மிதமிஞ்சிய நம்பிக்கையால் கைவிடப்பட்டது.

இதில் இன்னோர் விடயத்தையும் சொல்லியாக வேண்டும் புலிகளுடனான மத்தியான சந்திப்பில் சிவராமும் கலந்து கொள்வதாகவே ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் வாசுதேவா, கண்ணன் ஆகியோர் பாசிக்குடா சென்ற சமயம் சிவராம் யாருக்குமே சொல்லாமல் கொழும்பிற்கு பஸ்ஸில் புறப்பட்டு சென்று விட்டார். நடைபெற இருக்கும் விபரீதத்தை சிவராம் முன்கூட்டியே அறிந்திருந்தாரோ என்ற சிந்தனை எனக்கு நீங்கவில்லை.

இவ்விடயம் சம்பந்தமாக மாணிக்கதாஸனிடம் வினவிய போது அந்தச் சந்தேகம் தனக்கும் இருப்பதாக சொல்லியிருந்தார் என்பதை விட சிவராமை த்ற்செயலாக சந்தித்த போது அவரிடமே எனது கேள்வியைக் கேட்க “இப்படி எத்தனை கதைகள் வரும்” என மட்டுமே சிவராம் பதிலளித்தார்.

பாசிக்குடாவில் இருந்து புலிகளின் அலுவலகம் நோக்கிப் புறப்பட்ட வாசுதேவா, கண்னன், சுபாஸ், ஆனந்தன் உள்ளிட்ட புளொட் இயக்க உறுப்பினர்கள் கிரான் சந்தியில் இவர்களை எதிர்பார்த்திருந்த புலிகளினால் படுகொலை செய்யப்பட்டது மட்டுமல்லாமல் அனைவரது உடல்களையும் வேறு இடத்திற்கு எடுத்துச் சென்று எரித்தும் முடித்தார்கள் புலிகள்.

இச்செய்தி மட்டக்களப்பு முழுவதும் பரவத் தொடங்கியதும் ஒருவித பதட்டநிலை உருவானதையும் தெளிவாக அறிந்த புலிகளின் தலைமைகள் தலைமறைவாக, சித்தா என்பர் மட்டுமே மட்டக்களப்பில் இருந்த புலிகளின் அலுவலகத்தில் தங்கியிருந்தார். ஒரேதினத்தில் பல தடவைகள் சித்தாவை சந்தித்து புளொட் இயக்க உறுப்பினர்களின் உடல்களையாவது தாருங்கள் என வாசுதேவாவின் உறவினார்கள் சித்தாவைக் கேட்ட போதும், எந்தவிதமான பதில்களையும் சித்தாவினால் வழங்க முடியாற் போனது.

அடுத்தநாள் காலை புலிகளின் மட்டக்களப்பு அலுவலம் வாசுதேவாவின் உறவினர்கள் நன்பர்கள் பலரினால், முற்றுகையிடப்பட்டு ஏற்றப்பட்டடிருந்த புலிக்கொடியும் வாசுதேவாவின் உறவினர்களால் கழட்டி எறியப்பட்டது. புலிக்கொடி கழட்டப்பட்டதும் மிகவும் கோபமடைந்த சித்தா “இன்னும் பலருக்கு மோசமான விளைவுகள் ஏற்படாமல் தடுப்பதென்றால், இங்கிருந்து செல்லுங்கள்” என உரக்கக் கத்தியபோது வாசுதேவாவின் உறவினர்களால் பலவந்தமாக தரையில் தள்ளப்பட்டு தாக்குதலுக்கும் இலக்கானார்.

மிகவும் கேவலமாக நயவஞ்சகமான முறையில் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டவர்கள் எத்தனையாயிரம்? அந்த நிலைதான் இறுதியாக நந்திக்கடலிலும் நடந்தேறியது. கப்பல் வரும் எனக் காத்திருந்ததும், ஹெலி வாங்கத் திட்டமிட்டதும் அதே பாணியில் நடந்தேறிய சம்பவங்களே..! (நம்பிக்கைத் துரோகம்)

நன்றி.. இரா.வாசுதேவனின் மருமகன்.. -எஸ் எஸ். கணேந்திரன்-

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (இருபத்தோராவது நினைவு தினம்)

“புளொட்” தளபதி மாணிக்கதாசனின் நினைவு தினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவி வழங்கல்.. (பகுதி-1) -வீடியோ & படங்கள்-

மட்டக்களப்பில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, “பாதணிகள் & கற்றல் உபகரணங்கள்” வழங்கல்..! (வீடியோ & படங்கள்)

“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசன் நினைவாக, வவுனியா எங்கும் சுவரொட்டிகள்..! (படங்கள்)

மன்னாரில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, கற்றல் உபகரணங்கள் வழங்கல்..! (படங்கள்)

“புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, “புதிய கற்பகபுரம் பாலர் பாடசாலை” மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.. (வீடியோ & படங்கள்)

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, மணிப்புரம் ஆனந்த இல்லத்துக்கு மூவேளை உணவு.. (படங்கள் & வீடியோ)

“புளொட்” தோழர்.இளங்கோவின் நினைவிடமும், பேருந்து நிலையமும் புனருத்தாணம்..! (படங்கள்)

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, “கற்குழி ஞானம் முன்பள்ளிக்கு” நிதியுதவி.. (படங்கள் & வீடியோ)

“புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, திருநாவற்குளம் கிராமத்தில் சிறப்பு நிகழ்வுகள்..! (படங்கள்)

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, “உலருணவுப் பொதி மற்றும் பணவுதவி” வழங்கல்..! (வீடியோ & படங்கள்)

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, அன்னை திரேசா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.