வவுனியாவில் புளொட் இராணுவத் தளபதி மாணிக்கதாசனின் நினைவு!! (படங்கள்)
வவுனியாவில் புளொட் இராணுவத் தளபதி மாணிக்கதாசனின் நினைவு தினத்தினை முன்னிட்டு தாகசாந்தி நிலையம்!!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம் மாணிக்கம்ராஜன் (மாணிக்கதாசன்), மற்றும் அவருடன் இணைந்து “விடுதலைக்கு விதையான” திரு.தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ), திரு முருகேசு குணரட்ணம் (வினோ) ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினம் புளொட் மற்றும் அதன் அரசியல் பிரிவான டிபிஎல்எப் தோழர்கள் ஆதரவாளர்களினால் உலகெங்கும் நினைவு கூறப்படுகிறது.
மாணிக்கதாசனின் நினைவாக, இன்று (09.09.2020) அவரது குடும்ப உறவுகள், தோழர்கள், ஆதரவாளர்களினால் “தாகசாந்தி நிலையம்” வவுனியா கோவில்குளம் வீதியில் உள்ள “புளொட்” செயலதிபர் சமாதிக்கு முன்னிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி தாகசாந்தி நிலையம் ஊடாக அவ்வீதியால் சென்று வரும் அனைவரும், தாகம் தீர்த்து செல்வதைக் காணக் கூடியதாக உள்ளதுடன் “மறைந்த தோழர்களை நினைவு கூர்ந்து, இன்றைய வெப்ப காலநிலையைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற செயற்பாடுகள் வரவேற்கக் கூடியதென” பாராட்டி செல்வதையும் காணக் கூடியதாக உள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”
காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (இருபத்தோராவது நினைவு தினம்)
“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசன் நினைவாக, வவுனியா எங்கும் சுவரொட்டிகள்..! (படங்கள்)
மன்னாரில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, கற்றல் உபகரணங்கள் வழங்கல்..! (படங்கள்)
“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, மணிப்புரம் ஆனந்த இல்லத்துக்கு மூவேளை உணவு.. (படங்கள் & வீடியோ)
“புளொட்” தோழர்.இளங்கோவின் நினைவிடமும், பேருந்து நிலையமும் புனருத்தாணம்..! (படங்கள்)
“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, “கற்குழி ஞானம் முன்பள்ளிக்கு” நிதியுதவி.. (படங்கள் & வீடியோ)
“புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, திருநாவற்குளம் கிராமத்தில் சிறப்பு நிகழ்வுகள்..! (படங்கள்)
“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, “உலருணவுப் பொதி மற்றும் பணவுதவி” வழங்கல்..! (வீடியோ & படங்கள்)