“புளொட்” கண்ணன், வாசுதேவா நினைவாக “வாழ்வாதார உதவிகள்”..! (படங்கள் & வீடியோ)

“புளொட்” கண்ணன், வாசுதேவா நினைவாக வாழ்வாதார உதவிகள் (படங்கள் & வீடியோ)
கடந்த 13.09.1987ல் மட்டக்களப்பு வாழைச்சேனை கிரான் பிரதேசத்தில் இடம்பெற்ற ஏகப் பிரதிநிதித்துவத்திற்கான படுகொலையில் உயிர்நீத்த கழகத்தின் படைத்துறைச் செயலர் சோதீஸ்வரன் (கண்ணன்), அரசியல்துறை செயலர் இரா.வாசுதேவா (வாசு) மற்றும் கழக முக்கியஸ்தர்கள் மற்றும் சிரேஸ்ட உறுப்பினர்களான பவானந்தன் (சுபாஸ்), மணிவண்ணன் (ஆனந்தன்), ஹரிகரன்(ஈழமகிந்தன்), நிக்லஸ், மைக்கல், கணேஸ்(செல்வம்) ரஞ்சித், மணிமாறன், எஸ்.ஏ.ரவி, நவரட்ணம் சண்முகநாதன் (ராஜன்) உள்ளிட்ட தோழர்களின் 33ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று ஆகும்.
புளொட் உறுப்பினர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியற் செயலாளர் வாசுதேவா (வாசு -கோவிந்தன் வீதி மட்டக்களப்பு), படைத்துறைச் செயலாளர் ஜோதீஸ்வரன் (கண்ணன் -சுழிபுரம்), பவானந்தன் (சுபாஸ் -சந்திவெளி), ஆனந்தன்-மணிவண்ணன்(மூளாய்), ஹரிஹரன் -ஈழமைந்தன்(பழுகாமம்), சீனித்தம்பி நிக்ளஸ்(ஆரையம்பதி), செல்வம் -கணேஸ்(சந்திவெளி), ரஞ்சித்(சந்திவெளி), மணிமாறன்(புல்லுவலை), கண்ணன்(கல்குடா), எஸ்.ஏ.ரவி (சந்திவெளி), நவரட்ணம் சண்முகநாதன் (ராஜன் -வல்வெட்டித்துறை), ஜெகன்(ஓமந்தை), செல்வம்-நாகேந்திரன்(சந்தாவெளி), சின்னமெண்டிஸ் (இருதயபுரம்), பாலன்(செங்கலடி), சாந்தன் (வாழைச்சேனை), சங்கரப்பிள்ளை-மைக்கல் (நாவற்குடா) உட்பட்டோரின் 33ம் ஆண்டு நினைவுநாள்.
இந்நினைவுநாளை முன்னிட்டு “மாணிக்கதாசன் பவுண்டேசன்” எனும் “மாணிக்கதாசன் நற்பணிமன்றத்தால்” இன்றையதினம் தாயக பிரதேசங்களில் பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.
குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் பம்பைமடு கிராமத்தில் மேட்டுத்தெருவில் எதிர்பாராது மிதிவெடி வெடித்து கண்பார்வை இழந்து, வறுமையில் வாடும் குடும்பத் தலைவரைக் கொண்ட குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.
அத்தோடு வவுனியா நகர கிராமத்தில் வசிக்கும் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பத்திற்கு உலருணவுப் பொதி வழங்கப்பட்டது.
மரணித்த தோழர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு தோழர்கள் நினைவாக “மாணிக்கதாசன் நற்பணிமன்றம்” ஊடாக, மேற்படி வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்.. – தலைமையகம், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” வவுனியா.