;
Athirady Tamil News

மட்டுநகரில் “புளொட்” கண்ணன், வாசுதேவா நினைவாக நிகழ்வு & கற்றல் உபகரணங்கள்..! (படங்கள்)

0

மட்டுநகரில் “புளொட்” கண்ணன், வாசுதேவா நினைவாக நிகழ்வு & கற்றல் உபகரணங்கள்..! (படங்கள்)

கடந்த 13.09.1987ல் மட்டக்களப்பு வாழைச்சேனை கிரான் பிரதேசத்தில் இடம்பெற்ற ஏகப் பிரதிநிதித்துவத்திற்கான படுகொலையில் உயிர்நீத்த கழகத்தின் படைத்துறைச் செயலர் சோதீஸ்வரன் (கண்ணன்), அரசியல்துறை செயலர் இரா.வாசுதேவா (வாசு) மற்றும் கழக முக்கியஸ்தர்கள் மற்றும் சிரேஸ்ட உறுப்பினர்களான பவானந்தன் (சுபாஸ்), மணிவண்ணன் (ஆனந்தன்), ஹரிகரன்(ஈழமகிந்தன்), நிக்லஸ், மைக்கல், கணேஸ்(செல்வம்) ரஞ்சித், மணிமாறன், எஸ்.ஏ.ரவி, நவரட்ணம் சண்முகநாதன் (ராஜன்) உள்ளிட்ட தோழர்களின் 33ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று ஆகும்.

புளொட் உறுப்பினர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியற் செயலாளர் வாசுதேவா (வாசு -கோவிந்தன் வீதி மட்டக்களப்பு), படைத்துறைச் செயலாளர் ஜோதீஸ்வரன் (கண்ணன் -சுழிபுரம்), பவானந்தன் (சுபாஸ் -சந்திவெளி), ஆனந்தன்-மணிவண்ணன் (மூளாய்), ஹரிஹரன் -ஈழமைந்தன் (பழுகாமம்), சீனித்தம்பி நிக்ளஸ் (ஆரையம்பதி), செல்வம் -கணேஸ் (சந்திவெளி), ரஞ்சித் (சந்திவெளி), மணிமாறன் (புல்லுவலை), கண்ணன் (கல்குடா), எஸ்.ஏ.ரவி (சந்திவெளி), நவரட்ணம் சண்முகநாதன் (ராஜன் -வல்வெட்டித்துறை), ஜெகன்(ஓமந்தை), செல்வம்-நாகேந்திரன் (சந்தாவெளி), சின்னமெண்டிஸ் (இருதயபுரம்), பாலன் (செங்கலடி), சாந்தன் (வாழைச்சேனை), சங்கரப்பிள்ளை-மைக்கல் (நாவற்குடா) உட்பட்டோரின் 33ம் ஆண்டு நினைவுநாள்.

இந்நினைவுநாளை முன்னிட்டு “மாணிக்கதாசன் பவுண்டேசன்” எனும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால்” இன்றையதினம் தாயக பிரதேசங்களில் பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.

இதன் அடுத்த கட்டமாக இன்றுமாலை புளொட் அமைப்பின் அரசியல்பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் தோழர்.சூட்டியின் இல்லத்தில் நினைவஞ்சலி நிகழ்வும், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” சார்பான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதன்போது மரணித்த தோழர்களுக்கு, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது,

மேற்படி நிகழ்வில் புளொட் அமைப்பின் அரசியல்பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளரும், மாநகரசபை உறுப்பினருமான தோழர்.சூட்டி, புளொட் அமைப்பின் அரசியல்பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி உபதலைவர்களில் ஒருவரும், வவுணதீவு பிரதேசசபை உபதவிசாளருமான தோழர்.கேசவன், புளொட் அமைப்பின் அரசியல்பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மத்தியகுழு உறுப்பினர் தோழர்.முரளி, புளொட் அமைப்பின் அரசியல்பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மத்தியகுழு உறுப்பினர் தோழர்.கிருபா மாஸ்ரர் ஆகியோருடன் மாணவ மாணவிகளும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

மேற்படி நிகழ்வில் நாவற்குடா, ஆரையம்பதி, திராய்மடு, புதுநகர், திமிலதீவு போன்ற பிரதேசங்களில் கல்வி பயிலும் சில மாணவ மாணவிகளுக்கான கற்றல் உபகரணங்கள் “மாணிக்கதாசன் பவுண்டேசனின்” நிதிப் பங்களிப்பில் வழங்கி வைக்கப்பட்டது.

தகவல் & படங்கள்.. – தலைமையகம், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” வவுனியா.

“புளொட்” கண்ணன், வாசுதேவா நினைவாக “வாழ்வாதார உதவிகள்”..! (படங்கள் & வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − two =

*