“புளொட்” செயலதிபர் தோழர்.உமாமகேஸ்வரனின், “பேருந்து நிலையம்” புனருத்தாணம்..! (படங்கள்)

“புளொட்” செயலதிபர் தோழர்.உமாமகேஸ்வரனின், பேருந்து நிலையம் புனருத்தாணம்..! (படங்கள்)
கடந்த 16.07.1989 அன்று “அந்நிய சக்திகளின்” தூண்டுதலினால் நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட “மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியும், செயலதிபருமான” தோழர்.உமா மகேஸ்வரன் அவர்களின் நினைவாக, செயலதிபரின் நினைவாலயத்துக்கு முன்னால் அவரது பெயரில் நிறுவப்பட்ட பேரூந்து நிலையமானது “புளொட் புலம்பெயர் சூம் குழுமத்தின்” தோழர்களின் கருத்துக்கு ஏற்ப, “மாணிக்கதாசன் பவுண்டேசனின்” முழுமையான நிதிப்பங்களிப்பில் புனரமைப்பு செய்யப்பட்டு உள்ளது.
புளொட் வவுனியா மாவட்ட அமைப்பாளர் சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் வழிகாட்டலில், நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் மேற்பார்வையில், இளைஞர் பாராளுமன்ற முன்னால் உறுப்பினர் கேசவன், இளைஞரணி அமைப்பாளர் கெர்சோன் கரிஸ் ஒழுங்கமைப்பில், புளொட் தோழர்களால் புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தகவல்… தலைமையகம், “மாணிக்கதாசன் பவுண்டேசன்”, வவுனியா.