கம்பஹா ஆடைத் தொழிற்சாலையிலிருந்து, பெண்கள் இருவர் புங்குடுதீவு வந்தனர்!

கம்பஹா ஆடைத் தொழிற்சாலையிலிருந்து, பெண்கள் இருவர் புங்குடுதீவு வந்தனர்!
கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய – மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் யகாதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு முன்னணி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பெண் பணிப்புரியும் குளிரூட்டப்பட்ட ஆடைத் தொழிற்சாலையில் 400 தொழிலாளர்கள் பணிப்புரிவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது, அந்த பெண்ணுடன் தொடர்புகொண்ட குழுவினர் யார் என்பதை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த பெண்ணுடன் பஸ்ஸில் பயணித்த சுமார் 40 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகா தார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கம்பஹா மாவட்டம் மினுவாங்கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் யாழ்ப்பாணம் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் ஊர் திரும்பிய நிலையில் புங்குடுதீவில் சுகாதார நடவடிக்கைகளும் விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜே 26 பகுதியான புங்குடுதீவு 11ஆம், 12ஆம் வட்டாரம் பகுதியில் வசிக்கும் பெண்கள் இருவர் மினுவாங்கொடையில் இருந்து கடந்த வாரம் ஒருவரும், நேற்று முன்தினம் ஒருவரும் புங்குடுதீவில் உள்ள தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் இருவரும் பேருந்துகளில் பயணம் செய்திருக்கின்றமையும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே ஊர் திரும்பிய பெண்களின் வீட்டுச் சூழலில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் பிரசன்னமாகியுள்ளதுடன் தீவிர விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், அந்தப் பகுதி அபாய பகுதியாக அறிவிக்கப்படக் கூடும் என்றும் மக்களை சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடைதொழிற்சாலை கட்டடம் சீல் வைப்பு – சுகாதார அதிகாரிகள்!!