புங்குடுதீவு ரூபன்சர்மாவின் வித்துடல், மக்களின் அஞ்சலிக்காக புங்குடுதீவில்.. (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவு ரூபன்சர்மாவின் வித்துடல், மக்களின் அஞ்சலிக்காக புங்குடுதீவில்.. (படங்கள் & வீடியோ)
புங்குடுதீவு, ஊரதீவு சிவன் ஆலய அர்ச்சகரான கிளிநொச்சியை சேர்ந்த ரூபன் சர்மா எனும் இராசையா இராசரூப சர்மா (32) என்பவர் நேற்றுமுன்தினம் படுகொலை செய்யப்படடமை நீங்கள் அறிந்ததே.
இவரது உடல் வைத்திய நடவைக்கையைத் தொடர்ந்து இன்றுமாலை உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்டு, முதலாவது நடவடிக்கையாக புங்குடுதீவு ஊரதீவு சனசமூக நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இங்கு நடைபெறும் அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து அமரர். ரூபன் சர்மாவின் வித்துடல், அவரது சொந்த ஊரான கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பிரதேசத்துக்கு நல்லடக்கத்துக்காக இன்றிரவு எடுத்து செல்லப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
(மேலதிக தகவல்கள் & படங்கள் தொடரும்)
-தகவல் & படங்கள்.. “அதிரடி”யின் யாழ் நிருபர் “கலைநிலா” மற்றும் “அதிரடி”யின் பிரத்தியேக நிருபர்கள் மற்றும் புங்குடுதீவு உறவுகள்.
புங்குடுதீவு பூசகர் கொலை; உதவியாளர் உள்ளிட்ட மூவரை வரும் ஒக்டோபர் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில்!!
புங்குடுதீவு ரூபன்சர்மாவின் படுகொலைக்கு காரணமென்ன? கொலையின் பின்னர் நடந்தது என்ன?? (படங்கள் &வீடியோ)
புங்குடுதீவு ரூபன்சர்மா கொலைக்கு காரணமென்ன? சந்தேகநபர்கள் பரபரப்பு வாக்குமூலம்.. (படங்கள் &வீடியோ)