;
Athirady Tamil News

அமரர் சொக்கலிங்கம் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு, “M.F” ஊடாக உதவிகள்.. (படங்கள் & வீடியோ)

0

அமரர் சொக்கலிங்கம் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு, “M.F” ஊடாக உதவிகள்.. (படங்கள் & வீடியோ)

அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு அறநெறி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது..
########################################

புங்குடுதீவுவைச் சேர்ந்தவரும், புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்தவருமான அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களின் பிறந்ததினமான இன்று (15.10.2020) அன்னாருடைய நினைவாக, அவர்களின் குடும்பத்தின் சார்பாக அவரது மகனும், லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய தேவஸ்தானத்தின் தலைவருமான திருவாளர் சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவர்களது சொந்த நிதிப் பங்களிப்பில், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக வவுனியா கற்குழி ஸ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறி மாணவர்களுக்கு அறநெறி வகுப்புக்கான கற்றல் உபகரணங்கள் ஆலயத்தில் வைத்து வழங்கப்பட்டது. முன்னதாக அன்னாரது நினைவாக பூசை வழிபாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் ஆலய பரிபால செயலாளரும் சமுக சேவகியுமான திருமதி இந்திரசித்தன் லோஜினி அவர்களும், ஆலய உறுப்பினர்கள் சார்பில் திருமதி கமலாதேவி பிரசாந்தன் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

செயலாளர் தமது நன்றியுரையில் பிறந்தநாள் காணும் அமரர் சொக்கலிங்கம் ஐயாவின் நினைவாக எமது மாணவர்களை தெரிவு செய்து கற்றல் உபகரணங்கள் வழங்கியமைக்கு ஆலயத்தின் சார்பில் அவரது கும்பத்தினருக்கு நன்றியினைத் தெரிவித்தார். கலந்து கொண்ட அனைத்து அறநெறி மாணவர்களுக்கும் கற்றல் உதவி வழங்கப்பட்டது.

தகவல் & படங்கள்.. தலைமையகம், “மாணிக்கதாசன் பவுண்டேசன்”, வவுனியா.

அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு வவுனியா மணிப்புரம் ஆனந்த இல்லத்து அன்னையர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
########################################

புங்குடுதீவுவைச் சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்தவருமான அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களின் பிறந்ததினமான இன்று (15.10.2020) அன்னாருடைய நினைவாக அவர்களின் குடும்பத்தின் சார்பாக, அவரது மூத்தமகனும் லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய தேவஸ்தானத்தின் தலைவருமான திருவாளர் சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவர்களது சொந்த நிதிப் பங்களிப்பில், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக வவுனியா மணிப்புரம் ஆனந்த இல்லத்தில் தங்கியிருக்கும் உறவுகளால் கைவிடப்பட்டு மனநிலை குன்றிய அன்னையர்களை பிறந்தநாள் கேக் வெட்டி மகிழ்வூட்டி மதிய விசேட உணவும் கொடுக்கப்பட்டது.

முன்னதாக கற்குழி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விசேட பூசை செய்யப்பட்டு, அறநெறி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இவ்வில்லத்தில் வாழும் ஆதரவற்ற அன்னையர்களுக்கு சுவிஸ் ரஞ்சன் அண்ணனின் உதவிகள் கிடைக்கப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறே இன்றும் மதிய உணவு வழங்கியதும் போற்றத்தக்கதாகும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக சுவிஸ்ரஞ்சன் அண்ணாவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

தகவல் & படங்கள்.. தலைமையகம், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” வவுனியா.

அமரர் சொக்கலிங்கம் அவர்களது நினைவாக தனித்து வாழும் முதியவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.
#######################################

இன்றைய நாளில் பிறந்த நாளைக் காணும் புங்குடுதீவின் பிரபல வர்த்தகரான சொக்கர் என எல்லாராலும் அறியப்பட்ட சொக்கலிங்கம் அவர்களது நினைவாக அவரது குடும்பத்தின் சார்பாக அன்னாரது மூத்த மகனும், லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை தேவஸ்தானத்தின் தலைவரும், சமுகத் தொண்டருமாகிய சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவரது சொந்த நிதியில் இன்றைய நாளில் வவுனியாவில் பல்வேறு உதவிநலத் திட்டங்கள் மேற்கோள்ளப்பட்டது.

அந்தவகையில் ஓமந்தை பேயாடிக் குளம் கிராமத்தில் தனித்து வாழும் நீரழிவு நோய் காரணமாக ஒரு காலை இழந்து மிகவும் சிரமப்படும் முதியவருக்கு வாழ்வாதார உதவி வழங்க வேண்டுமென சமுர்த்தி அலுவலகர் திருமதி சர்மிளா அவர்கள் கேட்டுக் கொண்டதுடன், இதனை கிராம சேவையாளர் திரு கோபால் அவர்களும் சிபார்சு செய்தார். அதனை கருத்திற் கொண்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டது.

“சிறிய அளவிலான தகரத்தால் வேயப்பட்ட காற்றோட்டம் வசதி இல்லாத குடிசையில் தனது இறுதிக் காலத்தை கழிக்கும் முதியவர்களை இனங்கண்டு உதவியது மிகப் பெரிய புண்ணியம்” என கிராம சேவையாளரால் கூறப்பட்டது. “தொடர்ந்து இவ்வாறான சமுக உதவிநலத் திட்டங்களை மேற்கொண்டு வரும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தையும் வாழ்த்துகிறேன்” என்றார்.

தகவல் & படங்கள்.. தலைமையகம், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” வவுனியா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four − 4 =

*