“புளொட்” அமைப்பின் “மாலைதீவுப் புரட்சி” 32வது வருட நினைவுநாள்..! (படங்கள் & வீடியோ)

“புளொட்” அமைப்பின் “மாலைதீவுப் புரட்சி” 32வது வருட நினைவுநாள்..! (படங்கள் & வீடியோ)
“மாலைதீவுப் புரட்சியில்” வித்தான கழகக் கண்மணிகளுக்கு 32வது நினைவுதின வீர வணக்கம்..!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் (புளொட்) 03.11.1988 அன்று மேற்கொள்ளப்பட்ட “மாலைதீவுப் புரட்சி” நடவடிக்கையின் போது, மாலைதீவு மற்றும் இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலில் களப்பலியான, கழகக் கண்மணிகளான தோழர் V.மணிவண்ணன் (வசந்தி -பண்டத்தரிப்பு), தோழர் செல்லத்தம்பி பத்மசீலன் வீந்திரன் (ஜூலி – இளவாலை), தோழர் சோமசுந்தரம் சந்திரபாலன் (நிதி – நெடுந்தீவு), தோழர் பாப்பா (முல்லைத்தீவு), தோழர் கோபி (சங்கானை), தோழர் அப்பி (பெரிய குஞ்சுக்குளம்), தோழர்.சின்னச்சங்கர் (முல்லைத்தீவு), தோழர் குமார் (தும்பனை, பருத்தித்துறை) ஆகியோருக்கு எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விழுது விட்ட விடுதலை விருட்சம்
பழுதுண்டு பட்டு விடாதிருக்க,
பவளத் தீவுதனில் பலியாகி விட்ட
பாசமிகு சோதர மறவர்களே..
உங்கள் கல்லறையில் மீது
அஞ்சலிக்கும் தோழர்கள்..
மக்கள் போராட்டத்தின்
மகத்தான தலைவர் பாதையில்,
அடியெடுத்து அஞ்சலிக்கின்றோம்..
விடுதலைக்காகவே ஏந்திய கருவிகள்
விழி மூடிய தோழர்களை நெஞ்சில் நிறுத்தி,
அழுதிடோம், அடங்கிடோம்..
ஒருங்கிணைந்து உரிமை பெற்றிடுவோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்)