;
Athirady Tamil News

“அமரர்.சொக்கர்” நினைவாக “M.F” ஊடாக வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

0

“அமரர்.சொக்கர்” நினைவாக “M.F” ஊடாக வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களது நினைவு நாளில் தாயகத்தில் சமுகப் பணிகள்..
##########################################

புங்குடுதீவில் பிறந்து, கொழும்பு மருதானையில் வர்த்தகத்தில் கோலோச்சி, லண்டன் மாநகரில் தனது இறுதிக்காலத்தை வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து மறைந்த சொக்கர் என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட, அமரர்.முருகேசு சொக்கலிங்கம் அவர்களது பதின்மூன்றாமாண்டு நினைவுத்திதியை முன்னிட்டு, அவர்களது குடும்பத்தின் சார்பில்.. அன்னாரது மூத்தமகனும் லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய அறங்காவல்துறைத் தலைவரும், பிரபல சமய, சமூக சேவையாளருமான திரு. சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவர்களால் அண்மைய வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பறநட்டாங்கல், உக்குளாங்குளம், மதவுவைத்த குளம், நெளுக்குளம், பம்பைமடு போன்ற கிராமங்களில் வசிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேற்றைய தினத்தைத் தொடர்ந்து இன்றைய தினமும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் மூலமாக உலர்உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

அத்தோடு வவுனியா மணிப்புரம் ஆனந்த இல்லத்தில் வசிக்கும் அன்னையர்களுக்கு விசேட உணவும் வழங்கப்பட்டது.

அண்மைக்காலமாக மாணிக்கதாசன் நற்பணிமன்றமூடாக பல்வேறு சமூக வாழ்வாதார உதவிகள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியெங்கும் வழங்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

மறைந்த அமரர்.முருகேசு சொக்கலிங்கம் ஐயாவின் ஆத்மா சாந்தியடைய தாயகத்திலிருந்து நாமும் இறைவனை வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி..

தகவல்& படங்கள்… தலைமையகம், “மாணிக்கதாசன் பவுண்டேஷன்”, வவுனியா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + nine =

*