;
Athirady Tamil News

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மணற்காடு மயானப் புனரமைப்பு” பூர்த்தி.. ஊரதீவு மயான வேலை ஆரம்பம்.. (படங்கள் & வீடியோ)

0

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மணற்காடு மயானப் புனரமைப்பு” பூர்த்தி.. ஊரதீவு மயான வேலை ஆரம்பம்.. (படங்கள் & வீடியோ)

“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் புங்குடுதீவு குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம் முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டதும், புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டதும், நீங்கள் அறிந்ததே.

இதனையடுத்து கடந்த 31.08.2020 அன்று “புங்குடுதீவு கண்ணகைபுரம் மணற்காடு” மயானம் புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாகியது. அன்றையதினம் ஆரம்ப நிகழ்வில் புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருமான திரு.இ.இளங்கோவன் அவர்கள் விருந்தினராகக் கலந்து கொள்ள, புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும் சமாதான நீதவானுமான திரு.எஸ்.கே சண்முகலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.

இவர்களுடன் திரு.எஸ்.கருணாகரன் (முன்னாள் தலைவர் புங். பலநோக்கு கூட்டுறவு சங்கம்) திரு.க.நாவலன் (வேலணை பிரதேச சபை உறுப்பினர்), திரு.க.வசந்தகுமார் (வேலணை பிரதேச சபை உறுப்பினர்), திரு.பிள்ளைநாயகம் சதீஷ் (சமூக ஆர்வலர்), மணற்காடு இந்துமயான அபிவிருத்தி சபை தலைவர் திரு.சு.கருணாகரன், செயலாளர் திரு.M.செல்வரெத்தினம், பொருளாளர் திரு.ஜெயபாலன் உட்பட பலரும் ஆரம்ப இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

ஆயினும் பின்னர் ஏற்படட கொரோனா நிலைமை, புரவிப் புயல், மழை, வெள்ளம் போன்ற காரணங்களினால் ஓரிரு மாதங்கள் தாமதம் ஆகிய போதிலும், கட்டிடக் கலைஞர் திரு.வனோஜன் மற்றும் அவரது குழுவினரின் துரித செயற்பாட்டினாலும், “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்” தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் விடாத அழுத்தத்தினாலும் நேற்றையதினம் வேலைகள் யாவும் பூர்த்தி அடைந்து உள்ளது.

அதாவது மேற்படி பழுதடைந்த நிலையில் இருந்த, புங்குடுதீவு கண்ணகைபுரம் “மணற்காடு” மயானத்தில் எரிகொட்டகை அமைத்தல், அதாவது ஏற்கனவே இருந்து அழிந்து போயுள்ள எரிகொட்டகையை புதிதாக கேடர் மாற்றி, அதுக்குரிய கூரை யாவும் புதிய தகரங்கள் மூலம் போடப்பட்டதுடன் அவ்விடத்தில் கிரியைகள் செய்வதுக்கான கிணறு மூடப்பட்டு உள்ளததினால், புதிதாக கிணறு உருவாக்கப்பட்டு கிணறு அமைக்கப்பட்டதுடன், அதுக்குரிய சுற்றுத்தளம் அமைத்தல் போன்றவை நடைபெற்றதுடன்,

ஏற்கனவே இருந்த இரண்டு மண்டபங்களும் புனரமைப்பு போன்ற வேலைகள் அதாவது கிரியை மண்டபத்தின் அத்திவாரம் பூசப்பட்டு, மேலே கூரைகள் மாற்றப்பட்டு வர்ணம் பூசப்பட்டு, மண்டபமும் முழுமையாக பூசப்பட்டு வர்ணம் பூசப்பட்டதுடன், சுற்றுமதிலின் இடிந்து போய் இருந்த ஒருபகுதி புதிதாகக் கட்டப்பட்டதுடன், வாசல் கதவும் (கேற்) போடப்பட்டதுடன், அம்மயானத்தின் பற்றையாகவும், மேடுபள்ளமாகவும் சீரற்ற முறையில் இருந்த சுற்றுப் பகுதிகள் யாவும் இயந்திரங்கள் மூலம் சீராக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு வழங்கப்படது.

புங்குடுதீவு சுவிஸ் மக்கள் ஒன்றியத்தினரின் ஊர்நோக்கிய பயன்மிகு பணியின் தொடர்ச்சியாக புங்குடுதீவு மணற்காடு இந்துமயானம் புனரமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு துரிதகதியில் நிறைவேற்றப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வானது நேற்றையதினம் புங்குடுதீவு சுவிஸ் மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், புங்குடுதீவு ஒருங்கிணைப்பாளர் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் (ஓய்வுநிலை அதிபர், புங்குடுதீவு நயினாதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க தலைவர்) அவர்களும், திரு.நா. நாகராசா (ஓய்வுநிலை அதிபர்) ஆகியோரினால் மக்களின் பாவனைக்கு சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இச்சுற்றாடலை புங்குடுதீவு நயினாதீவு முன்னைநாள் புங்குடுதீவு நயினாதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் திரு.சுப்பிரமணியம் கருணாகரன், கனடாவில் இருந்து வருகை தந்திருக்கும் திரு.ஐங்கரன் கதிர்காமநாதன் (நிறுவனர் படைப்பாளிகள் உலகம்), திரு.கருணாகரன் நாவலன் (பிரதேச சபை உறுப்பினர் வேலணை), திரு.சபாரெத்தினம் பரமேஸ்வரன் (சமூக ஆர்வலர்), திரு.கருணாகரன் குணாளன் (பொருளாளர் தீவக சிவில் சமூகம்), திரு.பிள்ளைநாயகம் சதீஸ் (சமூக ஆர்வலர்), திரு.சண்முகநாதன் தரங்கன் (சமூக ஆர்வலர்), திரு.திபாகரன் (தனியார். போக்குவரத்துச் சங்கம்) ஆகியோர் வருகை தந்து பார்வையிட்டு “புங்குடுதீவு சுவிஸ் மக்கள் ஒன்றியத்தினரின்” செயற்பாட்டினை வெகுவாக பாராட்டிச் சென்றனர்.

புங்குடுதீவு மணற்காடு மயானம் – முன்னைய நிலை.. 30.08.2020 (வீடியோ)

புங்குடுதீவு மணற்காடு மயானம் – தற்போதைய நிலை.. 30.12.2020 (வீடியோ)

§§§ ஊரதீவு மயானம் புனரமைப்பு… §§§

தற்போதைய ஊரதீவு மயானமானது, அதாவது தற்போதைய உடலம் எரிக்கும் இடம் சிறியதாகவும், வீதியோரத்தில் அமைந்து உள்ளதாகவும், அத்துடன் உடலம் எரியூட்டுவது, வடக்கு(தலை) தெற்காக (கால்) அமையாமல், அத்திவாரம் மட்டுமே அதுவும் சிறியதாக உள்ளதினால், குறிப்பாக எரி கொட்டகை இல்லாமல் உள்ளதினால் அதே இடத்தில் உட்புறமாக எரி கொட்டகை அமைத்துத் தர வேண்டுமெனவும், அதேபோல் தற்போதைய ஊரதீவு மயானக்கிணறு பாழடைந்து உள்ளதினால் புதிதாக முழுமையாகப் புனரமைத்துக் கட்ட வேண்டுமெனவும், அதேபோல் ஊரதீவு மயான மண்டபம் புனரமைக்க வேண்டுமெனவும், அம்மயானத்தின் சுற்றாடல் முழுமையாக சீரமைத்துத் தர வேண்டுமெனவும்,

அப்பிரதேசத்தின் (ஊரதீவு) சமூக சேவகர்களில் ஒருவரும், சுவிஸ் ஒன்றியத்தின் புங்குடுதீவுப் பிரதிநிதியுமாகிய திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் மற்றும் ஊரதீவுப் பிரதேச பிரதிநிதிகளில் ஒருவரும், சமூகத் தொண்டனுமாகிய “பால்குடி” எனும் திரு.சி.பரமேஸ்வரன் ஆகியோர் முன்வைத்த கோரிக்கையை அடுத்து,

இதனை “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களினால் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய” நிர்வாக சபைக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, “உரிய அனுமதி பெற்று, சட்ட ரீதியாக அமைக்க வேண்டுமெனவும், இதுக்குரிய முழுமையான நிதியை ஒன்றியம் பொறுப்பெடுக்க வேண்டுமெனவும்” தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி ஊரதீவு மயான புனரமைப்பு வேலைகள் நேற்றையதினம் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் (ஓய்வுநிலை அதிபர்), திரு.நா. நாகராசா (ஓய்வுநிலை அதிபர் ) ஆகியோர் முன்னிலையில் ஊரதீவுப் பிரதேச பிரதிநிதிகளில் ஒருவரும், சமூகத் தொண்டனுமாகிய “பால்குடி” எனும் திரு.சி.பரமேஸ்வரன் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

புங்குடுதீவு ஊரதீவு மயான தற்போதைய நிலை.. – 30.12.2020 (வீடியோ)

§§§ வல்லன் நாவுண்டான்மலை மயானம்.. §§§

இந்த “ஊரதீவு மயான வேலைகள்” ஓரிரு கிழமைகளில் முடிவுற்றதும், அடுத்ததாக வல்லன் நாவுண்டான்மலை மயான வேலைகள் ஆரம்பமாகும். அங்கும் எரிகொட்டகைக்கான அத்திவாரம் மட்டுமே சிறியளவில் போடப்பட்டு உள்ள போதிலும், எரிகொட்டகையோ, கிணறோ இல்லாததுடன், மண்டபமும் சுற்றுப் பிரதேசமும் பாழடைந்து காணப்படுவதினால் விரிவான (விசாலமான) புதிய அத்திவாரம் மேலதிகமாகப் போடப்பட்டு எரிகொட்டகை புதிதாக அமைக்கப்படுவதுடன், கிணறும் புதிதாக அமைக்கப்படுவதுடன், மண்டப திருத்த வேலையும், சுற்றாடல் புனரமைப்பும் மேற்கொள்ளப்பட உள்ளது.

புங்குடுதீவு வல்லன் நாவுண்டான்மலை மயான தற்போதைய நிலை.. – 30.12.2020 (வீடியோ)

எமது “ஊர் நோக்கிய” புனரமைப்பு வேலைகளை தொடர்ந்து மேற்கொள்ள இணைந்து செயல்படுமாறும், 2020 வருடம் முடிவடைவதை மனதில் கொண்டும் சந்தாவைக் கட்டி உதவ வேண்டுமெனவும் சுவிஸ் வாழ் அனைத்து புங்குடுதீவு மக்களையும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். (இதுவரை 2019, 2020 வருட சந்தா செலுத்தாதோர், உடன் அதனை செலுத்தி இணைந்து செயல்படுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.) “அனைவருக்கும் சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” நன்றி

“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
31.12.2020

You might also like

Leave A Reply

Your email address will not be published.