;
Athirady Tamil News

“புளொட்” தளபதி சுந்தரத்தின் நினைவாக, “மாணிக்கதாசன் பவுண்டேசன்” சார்பில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

0

“புளொட்” தளபதி சுந்தரத்தின் நினைவாக, “மாணிக்கதாசன் பவுண்டேசன்” சார்பில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

புதிய பாதை தோழர் சுந்தரம் அவர்களின் 39 வது வருட நினைவு நாளில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.  
############################################

ஈழவிடுதலைப் போராட்ட சக்திகளின் தொடக்குநரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், தளபதியும், புதியபாதை ஆசிரியருமான தோழர். சதாசிவம் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) யாழ் சுழிபுரத்தை பிறப்பிடமாய் கொண்ட அவர் வீரமகனாய் மரணித்தது 02.01.1982 ஆண்டு இன்றுடன் வருடங்கள் 39வது நினைவு நாளை முன்னிட்டு “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக வவுனியா திருநாவற்குளம், பட்டகாடு பகுதிகளில் கொரோனா தொற்று நோய் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பல குடும்பங்களுக்கு அங்கே காவல் பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிசாரின் அனுமதி பெற்று கொட்டும் மழையிலும் குடியிருப்பாளர்களின் முகப்பு வாசலில் உலருணவுப் பொதிகள் வைக்கப்பட்டு உரியவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு  வழங்கப்பட்டது.

“புதிய பாதை” அமைத்த தோழனை நினைவுகூர்ந்து அஞ்சலி நிகழ்வும் ஆரம்பத்தில் நடைபெற்றது. சிறந்த தலைமைப் பண்பும், துணிச்சலும், புரட்சிகரப் போராளியும், போராட்டத் தெளிவும் மிக்க பொதுவுடைமைவாதியான தோழர் சுந்தரம் அவர்கள் 02.01.1982 ல் யாழ். சித்திரா அச்சகத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

சகோதரப் படுகொலைகளை எதிர்த்து நின்ற தோழனை, சகோதரப் படுகொலையின் மூலமாகவே கொல்லப்பட்ட துயரச் சம்பவத்தின் நினைவஞ்சலி நிகழ்வு..

புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட தலைமை அலுவலகத்தில் புளொட் மத்தியகுழு உறுப்பினரும், மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உபதலைவரும், தற்போதைய நகரசபை உறுப்பினருமான தோழர்.சந்திரகுலசிங்கம் மோகன் தலைமையில் நடைபெற்றது.

அஞ்சலி நிகழ்வில் புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினருமான தோழர்.த.யோகராஜா, புளொட் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகர சபை உறுப்பினரும், ஆசிரியருமான தோழர்.சுந்தரலிங்கம் காண்டீபன், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் பிரதம ஆலோசகர்களில் ஒருவரான தோழர்.மாணிக்கம் ஜெகன், கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்களான தோழர் தம்பா ரவி, தோழர் சிவா, கட்சியின் மாவட்ட  அலுவலக பொறுப்பாளர் தோழர் ஓசை, இளைஞரணி உறுப்பினர் தோழர் நந்தன் கீர்த்தனன் ஆகியோர் உட்பட கழக தோழர்களும், ஆதரவாளர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

அஞ்சலி நிகழ்வின் பின்னர் “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள், திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சந்திரேஸ்வரன் ரவி அவர்களிடம் அலுவலகத்தில் வைத்து நேரடியாகக் கையளிக்கப்பட்டது.

இதன் பின்னர் திருநாவற்குளம் பட்டக்காடு போன்ற கிராமங்களில் தனிமைப்படுத்ப்பட்ட குடும்பங்களுக்கு அவர்கள் வீட்டு வாசலில் உணவுப் பொதி வைக்கப்பட்டு உரியவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வு ஒழுங்கமைப்பினை “மாணிக்கதாசன் நற்பணிமன்றம்” செய்திருந்த இந்திகழ்வில் திருநாவற்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவரும், தோழர்களுடன் கலந்து கொண்டு பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொதியினை வழங்கி வைத்தார்.

“மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக வழங்கப்பட்ட மேற்படி அத்தியாவசிய உலருணவுப் பொருட்களுக்கான நிதியுதவியை யாழ்.அரியாலை பூம்புகாரை சேர்ந்தவரும், தற்போது நெதர்லாந்து நாட்டில் வசிப்பவருமான புளொட் தோழர்.தங்கராஜா கந்தசாமி குடும்பத்தினரும், தண்ணீரூற்று முள்ளியவளை முல்லைத்தீவை   சேர்ந்தவரும், 1984ம் ஆண்டு காலப் பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) மாணவர் அமைப்பான தமிழீழ மாணவர் பேரவையின் (ரெசோ) வன்னி மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவருமான, தற்போது கனடாவில் வசிப்பவருமான தோழர்.வினோ எனும் நிரஞ்சன் பொன்னம்பலம் குடும்பத்தினரும் வழங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிதி உதவியளித்த தோழர் தங்கராஜா கந்தசாமி குடும்பத்தினருக்கும், தோழர் நிரஞ்சன் பொன்னம்பலம் குடும்பத்தினருக்கும், மேற்படி நிகழ்வை திறம்பட நடத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.  

தகவல் & படங்கள்… -தலைமையகம், “மாணிக்கதாசன் பவுண்டேசன்”, வவுனியா.

புளொட் தளபதி சுந்தரத்தின் வரலாறு.. இன்று 39 வது நினைவுதினம்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × two =

*