;
Athirady Tamil News

“புளொட்” செயலதிபர் உமா மகேஸ்வரன் குறித்து, தளபதி மாணிக்கதாசனின் கருத்து.. (படங்கள்)

0

புளொட் செயலதிபர் உமா மகேஸ்வரன் குறித்து, தளபதி மாணிக்கதாசனின் கருத்து.. (படங்கள்)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் அமரர் தோழர்.உமா மகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் “ஜனன தினத்தை” (18.02.1945) முன்னிட்டு.. 1992 ம் ஆண்டு, புளொட் இராணுவத் தளபதியும், உபதலைவருமான அமரர் தோழர்.மாணிக்கதாசன் அவர்கள் “விடுதலைப்பாதை” ஊடாக தெரிவித்த கருத்து.. (மீள்பிரசுரம்)

தெளிந்த சிந்தனை, துல்லிய நோக்கு, உறுதியான கொள்கைப் பற்று, முன்னோடி செயற்பாடு, கடின உழைப்பு, வெற்றியில் மயங்கமை, தோல்வியில் துவளாமை, கலங்கா உள்ளம், எதிரிகளை மதித்தல், சிக்கனம் போன்றவற்றின் ஒட்டுமொத்த தொகுப்புருவமே எமது கழகத்தின் ஸ்தாபகரும் செயலதிபருமான தோழர் உமாமகேஸ்வரன் -தோழர் மாணிக்கதாசன்-

(தமிழீழ விடுதலை கழகத்தின் (புளொட்) ஸ்தாபகரும், செயலதிபரும்,மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியுமான தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கழகத்தின் (புளொட்) மத்திய குழு உறுப்பினரும் இராணுவப் பிரிவுத் தலைவருமான தோழர் மாணிக்கதாசன் செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் நினைவு கூறுகிறார். )

சர்வதேச ஏகாதிபத்திரம் முட்கள் மத்தியில் இருக்கும் ரோசாப்பூபோன்ற தமிழீழத்தினைக் கசங்காது கிழியாது எடுக்கவேண்டுமோன்றால் நிதானம், விவேகம் போன்ற சாணக்கியம், தொலைநோக்கு என்பன முக்கியமாகக் கருத்திற் கொள்ள வேண்டும்; இவை போன்றவற்றில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும்;

அதை விடுத்து வறட்டுத் தனமான இராணுவ காரியங்களை மட்டும் நம்பி தமிழீழம், தமிழீழ உரிமைகளைப் பெறமுடியாது என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டு செயற்பட்டு வந்த கழக ஸ்தாபகரும், செயலதிபருமான தோழர் க. உமாமகேஸ்வரனுடன் நீண்ட காலம் பழகியவன் என்பதனாலும், சுகவீனமான காலங்களில், அனைத்து விதமான கலநிலைக்குள்ளும், கடினமான காலங்களிலும், களங்களிலும், கழகத்தில் நிர்வாகக் குழப்பம் ஏற்பட்ட காலங்களிலும், தோழர் உமாமகேஸ்வரனுடன் தோளோடு தோள் நின்றவன் என்பதனாலும் நான் அவரைப் பற்றித் தெரியபடுத்துவது மாத்திரமே அவரிற்குச் செய்யும் உண்மை அஞ்சலியாக, மரியாதையாக, கடமையாக எண்ணவில்லை; அவரிற்காகவும், அவரது கொள்கைகளிற்காகவும் நாம் மக்களுக்கு செய்ய வேண்டியவை பல, அவை தொடர்ந்து வருங்காலங்களில் நிறைவேற்றிச் செல்வோம்.

“தெளிந்த சிந்தனை துல்லிய நோக்கு உறுதியான கொள்கைப் பற்று முன்னோடிக் செயற்பாடு, கடின உழைப்பு, வெற்றியில் மயங்கமை, தோல்வியில் துவளாமை, கலங்கா உள்ளம், எதிரிகளை மதித்தல், சிக்கனம் போன்றவற்றின் ஒட்டுமொத்த தொகுப்புருவமே” எமது ஸ்தாபகரும் செயலதிபருமான தோழர் உமா.

எமது பிரச்சினையில் நாமும், ஸ்ரீலங்கா வல்லரசுகளும், இந்து மா சமுத்திரத்தில் இலங்கையின் அமைவிடமும் சம்பந்தப்பட்டுள்ளதால் எமது பிரச்சனையில் ஏற்படக் கூடிய வெற்றி தோல்வி ஏகாதிபத்திய நாடுகளின் தென்கிழக்காசிய நாடுகளின் நலனை எவ்வளவு எவ்விதம் பாதிக்கும் என்பதனையும் நாம் தெளிவாக அறிந்து செயற்பட வேண்டும்.

இதில் உரிய கவனம் எடுப்பதே தமிழினத்துக்கு நாம் செய்யும் உயரிய மரியாதையாகும் என்பதில் உறுதியுடன் இருந்து செயற்பட்டு வந்தார். இதில் அக்கறை செலுத்தாது நாம் செய்ற்பட்டால் நாம் மக்களை ஏமாற்றுபவர்களாகவே இருப்போம் என்றும்,

எமது செயற்பாடுகள், தியாகங்கள் உயிரிழப்புக்கள் எல்லாம் எமது பிரச்சினைகள் தம் நலம் பேணுவோரே இதில் பயன் அடைவர் என்றும், எமது சொந்தக் காலில் நின்று சரியான முறையில் எமது போராட்டத்தை முன்னெடுத்து விடுவோமேயானுல் இலங்கை அரசை விட இச்சக்திகளே எம்மை அழிக்க மும்மரமாகச் செயற்படுவார்கள்.

தமது நலன் பாதிப்படையுக் கூடிய விதத்தில் எமது போராட்டம் முடிவடையப்போகிறது என்றாலும் இச்சக்திகள் வேசம் போட்டு செயற்படும் எனவும் கூறி, இதன் எதிரொலியே இந்திய – இலங்கை ( India – Srilanka) ஒப்பந்தமாகும்.

இது இந்திய இலங்கை ஒப்பந்தமே தவிர, இலங்கை இந்திய ஒப்பந்தம் அல்ல. ஒப்பந்த விதிகளில் முக்கியமானவை பாழடைந்து போய் விட்ட தமது நட்பை புனருத்ததாரணம் செய்து கொள்வதே ஆகும்.

இதற்குப் பிரதியுபகாரமாக வடகிழக்குப் பிரச்சினையை இந்தியா தீர்த்து வைக்கும் என்பதே முக்கிய விதி என்பதால் அது தமிழரின் உரிமையை வழங்காது என்றும் , அதனை ஏற்க முடியாது என்றும் உறுதியுடன் இருந்து செயற்பட்டு வந்தார் செயலதிபர்.

தனது ஆழ்ந்த தெளிவான சிந்தனையால் ஏற்படுத்திக் கொண்ட கொள்கையில் என்றும் அவர் உறுதியாகவே இருந்து வந்தார். சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் முற்போக்கு சக்திகளை எமக்கதராவாகத் திரட்ட வேண்டும் என்பதிலும் சிங்கள அப்பாவி மக்கள் மீது எதுவித நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்பதிலும் அவர் உறுதியாக இருந்து வந்தார்.

அனுராதபுரம், மதவாச்சிப் பகுதிக்குள் ஊடூருவி சிங்கள அப்பாவி மக்களை கொல்லும்படி சில நாட்டு புலனாய்வுத்துறையினர் ஆயுதங்களுக்காப் பேரம் பேசிய போது, அதை ஏற்க மறுத்ததும் அல்லாது அதே திட்டத்தை புலிகள் வெற்றிகரமாக நடத்தியதையும், தொடர்ந்தும் தென்பகுதிக்குள் சென்று படமாளிகைக்குள் வெடிகுண்டு வைக்கும்படி அதே அயல்நாட்டுச் சக்திகள் கேட்டதற்கும் ஏற்க மறுத்திருந்தார்.

எந்தவிதமான வேலைகளாக இருப்பினும் தானே முன்நின்று செயற்படடுத்திக் காட்டி வந்ததினுல் அதில் இருக்கக் கூடிய நடைமுறை ரீதியான சிக்கல்கள், கடினங்களை சாத்தியப்படாக் கூறுகளை நேரடியாக ஈடுபட்டு அறிந்திருப்பதால் அவ்வேலையை எவரும் கடினம், சாக்குபோக்குகள் கூற முடியாத நிலை; செவ்வன நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட இவரே காரணமாக இருந்தார்.

எவ்வளவு கடின, தொடர்ச்சியான வேலைகளில் ஈடுபட்டு உறங்கிக் கொண்டிருந்தாலும், எந்நேரத்திலும் எதற்கும் செயற்பட வேண்டுமாக இருந்தாலும் உடனே செயற்படும் அதிசய குணமிக்கவர். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது ஒரு சிறிய சத்தத்திற்கும் கண்விழிக்கும் விழிப்புத் தன்மை கொண்டவர் செயலதிபர் தோழர் உமா!

பெருமிதம் ஏற்படுத்தும் எந்தச் செயலையும் பெரிதுபடுத்தாது தனது கடமைகளை ஒழுங்குடனே செய்வார். வெற்றி களிப்பில் மயங்குவதோ, தோல்வி – குழப்பங்கள் – பிரச்சினைகளைக் கண்டு கலந்குவதோ, பதட்டப்படுவதோ அவரிடம் கிடைக்காத குணமாகும்.

நாம் அதிசயப்படும் விதத்தில் அவரிடம் சிக்கனம் இருந்து வரும், செய்ய வேண்டிய இடத்தில் தேவைகளை நிறைவேற்றுவார். மேலதிக விரயங்கள் எதையும் செய்ய மாட்டார். தன் சகாக்கள் சுகவீனமான நாட்களில் முக்கியமாக முன்னின்று தேவையான ஏற்பாடுகளைக் கவனிப்பார். தோழர்களுக்கு சுகவீனம் என்றால் தனது சிறு ஓய்வு நேரங்களிலும் அங்கு வந்து நிற்பார்.

நான் பெரியவருடன் முதன் முதலில் இறங்கிய களம் நாச்சிமார் கோவில் துப்பாக்கிப் பிரயோகம். இதிலும் ஆணைகோட்டைத் தாக்குதலிலும், கிளிநொச்சி வங்கி தாக்குதலிலும், வட்டக்கச்சி விவசாயப் பண்ணை ஜீப் எடுத்தலிலும் “பெரியவரின்“ துணிச்சல், வீரம், நிதான செயற்பாடு, அதே நேரம் புறச் சூழ்நிலை பற்றி ஊகம் ஆகியவற்றில் திறமைகளைக் கண்டோம்.

செயல்கள், கதைகளைக் கேட்கும் போதே எமக்கு எங்கிருந்தது துணிவு, மனதைரியம், விரைவு வருகிறது என்றே அறியாமல் 15 நிமிடத்தில் திட்டமிட்ட வேலைகளை 9 நிமிடத்தில் முடித்ததும் உண்டு. களங்களில் அவர் நகச்சுவையுடனேயே செயற்படுவதால் அப்பழக்கம் எமக்கும் வந்து விடும்.

எம்முடன் எமக்கேற்ற விதத்திலும், அரச அதிகாரிகளுடன் அவர்களிற்கேற்ற விதத்திலும் அனைவரிற்கேற்ற விதத்திலும் பழகும் தன்மை கொண்டவர் செயலதிபர்.

தமிழர் உரிமை பற்றிய சிந்தனையிலும் தமிழை வளர்ப்பது பற்றியுமே சிந்தித்து நிற்பார். இப்பேற்பட்ட தகுதி பெற்ற தலைவரை, மக்களின் தலைவராக வரக்கூடிய தகுதி பெற்ற தலைவரை இழந்து விட்டோம். அவரது இடம் நிரப்பப்பட முடியா விட்டாலும் அவர் பணி தொடர்ந்து செய்வோம். மக்களின் விடுதலையை வென்றெடுப்போம்..!!
Thanks…. “VIDUTHALAIP PAATHAI” July 1992

“ மக்கள் யுத்தத்தின் மகத்தானதளபதி “ செயலதிபர்
.தோழர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் (முகுந்தன்)
(18.02.1945 -16.07.1989)

கழகத்தின் ஸ்தாபகர், செயலதிபர், தளபதி –என்று
சகல துறைகளிலும் சிறந்தோங்கிய வீரனே,
உன்னை இழந்து இன்றுடன் நான்கு ஆண்டுகள்
நிறைவு பெறுகின்றன தோழனே!!!

எத்தனைஆண்டுகள் நகர்ந்தாலும் இவ்-
வானும், மண்ணும் உள்ள வரை
நாம் இல்லை என்றாலும் உன்
நாமம் நிலைத்திருக்கும் தோழனே!!!

உழைக்கும் மக்களின் உரிமைக்காய்,
பாட்டாளி மக்களின் விடிவுக்காய்
தமிழினத்தின் விடுதலைக்காய் – மக்கள்
படையமைத்து “மகத்தான தளபதியாய்“
நீயிருந்து எம்மையும் பங்காளராய்,
உருவாக்கினாய் தோழனே!!!

உன் திறனை அறியாத கோழைகள் – உன்
உயிரைப் பிரித்து – உன் “ மக்கள் பணியை “
நிறுத்தி விட எண்ணினார்களோ? – உன்
வழி நின்று தோழர்கள் நாம் உன் பணி
தொடர்ந்திடுவோம் தோழனே!!!

காழ்ப்புணர்வு கொண்ட கயவர்கள் – தமிழினத்தின்
கலங்கரை விளக்கை அணைத்தனரோ? – உன்
உடலில் இருந்து உனது உயிரைப் பிரித்திருக்கலாம்.
மக்கள் இதயங்களிலிருந்து உன் நினைவைப் –
பிரிக்க முடியாது தோழனே!!!!

திர்க்கதரிசியே, திடமான கொள்கையுடன் – “ மக்கள்
படை “ யமைத்து வீறுநடை போட்டவனே,
பாதை மாறிய மக்கள் மாபெரும் “ மக்கள்
சக்தி “யாய் திரட்டிய மக்கள் தோழனே!!!!

வாழ்க உன் நாமம்!!
தொடர்வோம் உன் மக்கள் பணி!!!
உனது இலட்சிய கனவு நனவாகும் தோழனே!!!!

-தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட் ) சுவிஸ் கிளை –
Thanks…. “VIDUTHALAIP PAATHAI” July 1993

You might also like

Leave A Reply

Your email address will not be published.