;
Athirady Tamil News

சுவிஸ் நாட்டவரான ஜீன் பியரி அவர்கள் M.F ஊடாக வாழ்வாதார உதவி வழங்கல்.. (வீடியோ, படங்கள்)

0

சுவிஸ் நாட்டவரான ஜீன் பியரி அவர்கள் M.F ஊடாக வாழ்வாதார உதவி வழங்கல்.. (வீடியோ, படங்கள்)

சுவிஸ் நாட்டவரான ஜீன் பியரி அவர்கள் M.F ஊடாக வாழ்வாதார உதவி வழங்கி வைத்தார்.
###################################

சுவிஸ் நாட்டவரான ஜீன் பியரி அவர்கள் தனது தொண்ணூறாவது பிறந்த நாளை கடந்த 20.06.2021 இல் எமது தாயக சொந்தங்களோடும் சிறுவர்களோடும் மிக சிறப்பாக கொண்டாடினார்…

அவ்வேளையில் வவுனியா கல்மடு முல்லைக்குளம் கிராமத்தில் மிக மோசமாக வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்ட விசேடமாக கண்பார்வைக் குறைபாடான மனைவியோடு வாழும் குடும்பத்திற்கு கோழிக் கூடு மற்றும் கோழிகளை தனது நிதிப்பங்களிப்பில் வாழ்வாதார உதவியாக வழங்கி வைக்கும்படி கேட்டிருந்தார்..

இருப்பினும் அவ்வேளையில் பயணத்தடை நாட்டில் அமுல்படுத்தப்பட்ட சூழ்நிலையால் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” குறித்த சுவிஸ் நாட்டவரான திரு.ஜீன் பியரி அவர்களின் பிறந்த நாஈளன்று வழங்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.. ஆனால் தற்போது பயணத்தடை நீக்கப்பட்ட நிலையில் இன்றைய நாளில் குறித்த குடும்பத்திற்கு திரு.ஜீன் பியரி விரும்பி கேட்டுக் கொண்ட வாழ்வாதார உதவியான கோழிகளுடன் கூடிய கோழிக்கூடு வழங்கி வைக்கப்பட்டது.

தாயகத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சமூக சேவையினை சுவிஸ் நாட்டில் வாழும் தனது நண்பர்களான திரு.திருமதி. குணரட்ணம் தயாளினி மற்றும் ராஜு என அழைக்கப்படும் திரு.சுபாஸ்கரன் ஆகியோர் மூலமாகவும் இணையதளங்கள் மற்றும் முகப்புத்தக வாயிலாகவும் நன்கறிந்து “இவ்வாறான பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானும் உதவி செய்ய வேண்டும்” என மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு தொடர்பு கொண்டு மேலதிக பல தகவல்களை பெற்றுக் கொண்ட பின்..

தனது தொண்ணூறாவது பிறந்த நாளில் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பமான வவுனியா கல்மடு முல்லைக் குளம் கிராமத்தில் வசிக்கும் நல்லதம்பி ரவிச்சந்திரன் என்னும் மிகவும் ஏழ்மை நிலையில் வசிக்கும் குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான கோழி வளர்ப்பிற்கான பெரிய கூட்டினையும் கோழிகளையும் தனது பிறந்தநாள் பரிசாக வழங்கி வைக்கும்படி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஊடாக நிதிப்பங்களிப்பு தந்திருந்தார்.

இதுவரை காலமும் எமது தாயக உறவுகளின் புலம்பெயர் சொந்தங்கள் மூலமாகவே சகல விதமான உதவிகளும் கிடைக்கப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிலமை மாற்றப்பட்டு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” அரசியலுக்கு அப்பால் சாதி மத இன வேறுபாடுகள் இன்றி சமூகத்தின் மீதான அக்கறையான நேர்த்தியான சேவையை பார்த்து கேட்டறிந்து சுவிஸ் நாட்டவரான திரு.ஜீன் பியரி அவர்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு கைகோர்த்து தன்னார்வப் பணியினை முன்னெடுத்து வருவது தாயக உறவுகளுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை நிச்சயம் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை..

அந்த வகையில் திரு.ஜீன் பியரி அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. நன்றி.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
01.07.2021

சுவிஸ் நாட்டவரான ஜீன் பியரி அவர்களின் பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்கள் கொண்டாட்டம்.. (படங்கள் & வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.