;
Athirady Tamil News

புங்குடுதீவு சுவிஸ்ரமணன் வழங்கிய நிதியில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

0

சுவிஸ்வாழ் உறவான திரு சத்தியநாதன் றமணதாஸ் (றமனண்) அவர்கள் வழங்கிய பிறந்தநாள் அன்பளிப்பு நிதிப்பங்களிப்பில் உலருணவுப் பொதி வழங்கப்பட்டது.
###################################

சுவிஸ்வாழ் உறவான திருமதி சுவிஸ்ரஞ்சன் மோகனா அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சுவிஸ் றமனண் என அழைக்கப்படும் புங்குடுதீவை சேர்ந்த சத்தியநாதன் றமணதாஸ் அவர்கள் வழங்கிய அன்பளிப்பு நிதியில் தாயக உறவுகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

அன்மையில் சுவிஸ் நாட்டில் சுவிஸ்ரஞ்சன் மோகனா அவர்களின் பொன்விழா பிறந்த நாள் கொவண்டாட்டத்தை சுவிஸ்வாழ் உறவுகளும் சுவிஸ்ரஞ்சன் அவர்களது குடும்ப நண்பர்களும் ஏற்பாடு செய்து கொண்டாடி மகிழ்ந்தனர். இவ்வேளையில் எந்தவிதமான அன்பளிப்புக்களும் இல்லாமல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவும் என விழா ஏற்பாட்டாளர் சார்பில் சுவிஸ்ரஞ்சன் அவர்கள் வினயமாக கேட்டுக் கொண்டாலும் விழாவில் கலந்து கொண்டவர்களால் பலவிதமான அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் தனது பொன்விழா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கிடைக்கப் பெற்ற நிதி அன்பளிப்புக்கள் அனைத்தையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வாழ்வாதார உதவி மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சித் திட்ட நிதியத்திற்கு திருமதி சுவிஸ்ரஞ்சன் மோகனா அவர்கள் வழங்கியிருந்தார்.

அவ்வாறு சுவிஸ்வாழ் உறவான திரு சத்தியநாதன் றமணதாஸ் (ரமணன்) அவர்கள் வழங்கிய நிதிப்பங்களிப்பில் வவுனியா இராசேந்திரகுளம் விக்ஸ் காடு எனப்படும் கிராமத்தில் வாழும் அடிப்படை வசதிகளற்று வாழும் அன்றாட வருமானத்தை இழந்த குடும்பங்களான கணவரை இழந்து குழந்தைகளோடு வாழும் குடும்பங்கள், தனித்து வாழும் இரு வயோதிபக் குடும்பம், நீரழிவு நோயினால் இரத்தமாற்றம் செய்து வரும் நோயாளிக் குடும்பங்கள் என பலதரப்பட்ட வகையில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிதியினை வழங்கி தாயக மக்களின் பட்டினியை போக்கிய றமனண் என அழைக்கப்படும் சுவிஸ் சத்தியநாதன் றமணதாஸ் அவர்களுக்கு தாயக உறவுகளோடு “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” நன்றியினையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறது. அத்தோடு தனது பிறந்த நாளில் கிடைக்கப்பெற்ற நிதியை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சமூகப் பணிக்கு வழங்கிய திருமதி சுவிஸ்ரஞ்சன் மோகனா அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

03.07.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.