;
Athirady Tamil News

தேவையுடைய மக்களுக்கு, “M.F” குழுமம் வழங்கிய உலருணவுப் பொதிகள்.. (வீடியோ, படங்கள்)

0

சுவிஸ்வாழ் திருமதி மோகனா ரஞ்சன் அவர்களது பொன்விழா பிறந்தநாளை முன்னிட்டு “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” குழுமம் வழங்கிய உலருணவுப் பொதிகள்.
###################################
சுவிசில் வசிக்கும் திருமதி சுவிஸ்ரஞ்சன் மோகனா அவர்களது பிறந்தநாள் அன்பளிப்பாக தாயக உறவுகளுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கினார்.கனடா “நம் தாயகம்” திரு குணராஜா உதயராஜா மற்றும் மன்ற செயலாளர், பொருளாளர் ஆகியோர்.

சுவிசில் வசிக்கும் திருமதி சுவிஸ்ரஞ்சன் மோகனா அவர்களின் பொன்விழா அண்மையில் அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஏற்பாட்டில் விசேடமாக கொண்டாடப்பட்டது.

திருமதி மோகனா ரஞ்சன் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு, திருமதி மோகனா ரஞ்சன் அவர்களின் உறவினரும், கனடா நம் தாயகம் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் கனடா இணைப்பாளர்களில் ஒருவருமான திரு குணராஜா உதயராஜா, மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் பொருளாளர் செல்வி.ரம்மியா செல்வராஜா, செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் வாழ்வாதார உதவியாக சிவபுரம், நாலாம் கட்டை, கற்பகபுரம், நெளுக்குளம் போன்ற கிராமங்களில் வசிக்கும் விசேட தேவைக்குட்பட்ட குடும்பம், வயோதிப நிலையில் தனித்து கவனிப்பாரற்று வாழும் குடும்பங்கள், நாளாந்த வருமானத்தை இழந்த குடும்பங்கள்,. சிறிய குழந்தைகள் அதிகமுள்ள குடும்பங்கள் என தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

நாளாந்த வருமானம் இல்லாது அன்றாட உணவுக்கு சிரமப்படும் நிலையில் வாழும் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் குடும்பங்களை கிராமிய அமைப்புக்களின் உதவியோடு இனங்கண்டு அவர்களுக்கு கனடா “நம் தாயகம்” உதயராஜா, செல்வி.ரம்மியா செல்வராஜா, மாணிக்கம் ஜெகன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் (சுவிசில் வசிக்கும் மோகனா ரஞ்சன் அவர்களது பொன்விழா பிறந்தநாளை முன்னிட்டு வழங்கிய நிதிப் பங்களிப்பில்) மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் மூலமாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

பொன்விழா பிறந்த நாள் காணும் சுவிஸ்ரஞ்சன் மோகனா அவர்களை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயக உறவுகளோடு வாழ்க வாழ்கவென வாழ்த்துவதோடு, பிறந்தநாளை முன்னிட்டு நிதிப் பங்களிப்பு செய்த கனடா “நம் தாயகம்” உதயராஜா அவர்களுக்கும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் பொருளாளர் செல்வி.ரம்மியா செல்வராஜா, செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோருக்கும் மதிப்பார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. நன்றி.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

05.07.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.