;
Athirady Tamil News

தாயகத்தில் விசேடமாக கொண்டாடப்பட்ட, “மைலதன் துர்ஷிகா” திருமண நாள் விருந்துபசாரம்.. (படங்கள் & வீடியோ)

0

தாயகத்தில் விசேடமாக கொண்டாடப்பட்ட செல்வன் மைலதன், செல்வி துரஷிகா திருமணநாள் விருந்துபசாரம்.
###################################

இன்றையதினம் திருமண நாளைக் காணும் மைலதன், துர்ஷிகா ஆகியோரின் மணவாழ்க்கை சிறப்புற அமைய புதுமணத் தம்பதிகளை வாழ்த்தி மணமகள் துர்ஷிகாவின் சிறிய தந்தையும் புளொட் அமைப்பின் சுவிஸ் கிளைத் தோழருமான பாபு என அழைக்கப்படும் சுவிஸ் வாழ் உறவுகளான திரு திருமதி சித்திரவேல் (பாபு) ஹேமா தம்பதிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் நிதிப் பங்களிப்பில் தாயகத்தில் உள்ள கிராம மக்களுக்கு திருமண விருந்துபசாரம் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் வழங்கப்பட்டது.

மேற்படி புளொட் சுவிஸ் கிளைத் தோழரான பாபு அவர்கள் தனது குடும்பத்தின் நிகழ்வுகளை, “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஊடாக வாழ்வாதார உதவிகள், கல்விக்கு கரம் கொடுப்போம் என பல்வேறு சமூகப்பணியில் தன்னை ஈடுபடுத்தி உதவிகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளிலும் தனது பெறாமகளின் திருமண வைபவத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் விசேட மதிய திருமண விருந்துபசாரம் வழங்கியது மட்டுமன்றி மிகவும் பின்தங்கிய தொலைதூரக் கிராமங்களில், பலதரப்பட்ட வகையில் பாதிப்புக்குள்ளான வறிய நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் புதுமணத் தம்பதிகளான மைலதன் துரஷிகா தம்பதிகளின் திருமண தொடக்கநாள் பரிசாக மக்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் அவரவர் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டது. (அடுத்த செய்தியில் தொடரும்)

தாயகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு எப்படி உதவலாம் என பலர் நினைத்துக் கொண்டு, காலம் கடத்திக் கொண்டு செல்லும் தற்கால சூழ்நிலையில் “இப்படியும் உதவலாம், உதவும் மனப்பாங்கு இருந்தால் எப்படியும் உதவலாம்” என செயலில் காட்டியுள்ளனர் சுவிஸ் வாழ் புளொட் தோழமையான பாபு ஹேமா தம்பதிகள்.

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு இணைந்து தொடர்ச்சியாக சமூகப்பணியில் தம்மை ஈடுபடுத்தி வரும் சுவிஸ் வாழ் தோழமைத் தம்பதிகளுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தனது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு “புதுமணத் தம்பதிகளான மைலதன் துர்ஷிகா தம்பதிகள் சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென” வாழ்த்துகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
07.07.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.