;
Athirady Tamil News

“கனடா அரணின்” பிறந்தநாள் கொண்டாட்டமும், வாழ்வாதார உதவி வழங்கலும்.. (படங்கள் வீடியோ)

0

“கனடா அரணின்” பிறந்தநாள் கொண்டாட்டமும், வாழ்வாதார உதவி வழங்கலும்.. படங்கள் வீடியோ)
################################

கனடாவில் வசிக்கும் செல்வன் அரண் அவர்களது பிறந்தநாள் கொண்டாட்டம் தாயகத்தில் சிறுவர் பெரியோர் ஒன்றுகூடலில் இனிமையாக மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட லண்டனில் அமரத்துவமடைந்த அமரர்கள் சொக்கர் நாகேஷ் வழித்தோன்றல்களில் ஒருவரான இந்திரன் என அழைக்கப்படும் கனடாவில் வதியும் திரு.திருமதி. ஆபிரகாம்லிங்கம் கவிதா தம்பதிகளின் இளைய புதல்வனான “செல்வன்.அரண்” அவர்களின் பிறந்ததினம் தாயகத்தில் மிக மகிழ்ச்சியாக பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது..

அத்துடன் செல்வன். அரணின் பிறந்தநாளை முன்னிட்டு அரணின் பெற்றோர்களான திரு.திருமதி ஆபிரகாம்லிங்கம் (இந்திரன்) கவிதா தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் கணவரை இழந்த குடும்பங்கள், தந்தையை இழந்த குடும்பங்கள் என பொருளாதார ரீதியில் வறிய நிலையில் வாழும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகளும் மாணிக்கதாசன் நற்பணி மன்றதினால் வழங்கி வைக்கப்பட்டது.

திரு.திருமதி ஆபிரகாம்லிங்கம் (இந்திரன்) கவிதா தம்பதிகள் தங்களுடைய சகல நிகழ்வுகளையும் வெறுமனே ஆடம்பர கொண்டாட்டமாக இல்லாமல், தங்கள் குடும்பத்தின் இவ்வாறான நிகழ்வுகளை முன்னிட்டு சமூகப்பங்களிப்புக்கள் மூலமாகவே செய்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்றைய நாளில் பிறந்தநாளைக் கொண்டாடும் தங்களது இளைய மகன் செல்வன் அரண் அவர்களது பிறந்தநாளையும் வழமை போலவே சிறுவர் சிறுமியர்களை ஒன்றுகூட்டி அவர்களை மகிழ்ச்சிப் படுத்தியதுடன், பாதிக்கப்பட்ட வறிய நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி கொண்டாடுவதற்கு தங்களது நிதிப்பங்களிப்பை மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக வழங்கியுள்ளனர்.

இன்றைய நாளில் இனிதான பிறந்த நாளைக் கொண்டாடும் கனடாவாழ் செல்வன் அரண் அவர்களை தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் “தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, பல்கலையும் கற்று பேரும் புகழோடும் நிறைந்த செல்வத்தோடும் பெற்றோர்களைப் போல் சமூகநேயத் தொண்டராகவும்” வாழ வாழ்த்துகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

13.07.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.