;
Athirady Tamil News

பிரான்ஸ் செல்விகள்.அஞ்சனா, ஜானவி பிறந்தநாளில்; முல்லைத்தீவில் வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ)

0

பிரான்ஸ் செல்விகள்.அஞ்சனா, ஜானவி பிறந்தநாளில் முல்லைத்தீவில் வாழ்வாதார உதவி வழங்கியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
##################################

பிரான்ஸ் பாரீசில் வசிக்கும் திரு.திருமதி உமாசங்கர் ஜெனனி தம்பதிகளின் செல்வப் புதல்விகளான அஞ்சனா மற்றும் ஜானவி இருவருடைய பிறந்த நாளினை முன்னிட்டு செல்விகளின் பெற்றோர்களின் நிதிப்பங்களிப்பில், முல்லைத்தீவு முத்தையன்கட்டு மற்றும் ஒட்டுசுட்டான் ஆகிய இடங்களில் வாழும் விசேட தேவைக்குட்பட்டோர் குடும்பங்கள், வயோதிபர்களைக் கொண்ட குடும்பங்கள், ஆதரவற்ற தனித்து வாழ்வோர்கள் என பலதரப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தாயகத்தில் அச்சுவேலியைச் சேர்ந்த பிரான்ஸ் பாரீசில் வசிக்கும் திரு.திருமதி உமாசங்கர் ஜெனனி தம்பதிகளின் செல்லமகள்களும், அச்சுவேலியை சொந்தமாக கொண்ட சுவிஸ் தூண் மாநிலத்தில் வசிக்கும் ராஜூ என அழைக்கப்படும் திரு திருமதி சுபாஸ்கரன் கேமேஸ்வரி தம்பதிகளின் பேரக்குழந்தைகளுமான செல்வி அஞ்சனா தனது ஆறாவது பிறந்த நாளையும், செல்வி ஜானவி தனது மூன்றாவது பிறந்த நாளையும் இன்றைய நாளில் தாயகத்தில் உறவுகளோடு பெற்றோர்களின் நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் சிறப்பாக கொண்டாடினார்கள்..

செல்விகள் அஞ்சனா ஜானவி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வாழும் பாதிக்கப்பட்ட உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகளை வழங்கி வைக்கும்படி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் சமூக ஆர்வலரான ஏற்கனவே பலதரப்பட்ட சமூகப் பணிகளை தொடர்ந்து வாரிவழங்கிக் கொண்டிருக்கும் அஞ்சனா மற்றும் ஜானவி ஆகியோரின் பேரனான சுவிஷ் பேர்ண் முருகன் ஆலயத் தொண்டரான ராஜூ என அழைக்கப்படும் சுபாஸ்கரன் அவர்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க, இன்று வீரத்தின் விளைநிலமான மாவீரன் பண்டாரவன்னியன் கல்வெட்டு காணப்படும் ஒட்டுசுட்டான் பண்டாரவன்னியன் கிராமம் மற்றும் அதன் அயற் கிராமமான முத்தையன்கட்டு வித்தியாபுரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் இதுவரை உதவிகள் எதுவும் பெற்றுக் கொள்ளாத குடும்பங்கள் என கிராம அமைப்புக்களால் சிபார்சு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

மிகுந்த சிரமத்தின் மத்தியில் வாழ்கின்ற மக்களைத் தேடி இவ்வாறான உதவிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் புலம்பெயர் உறவுகளின் பங்களிப்புடன் நேர்த்தியாக செய்து வருகின்றது. இவ்வாறான நடவடிக்கைகளை கேள்விப்பட்டு எமது மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு இணைந்து, அதன் சுவிஸ் நிர்வாக சபையில் ஒருவராக தன்னை இணைத்துக் கொண்டு, பல்வேறு வாழ்வாதார உதவிகளை வழங்கி வருபவர் தான் சுவிஸ் தூண் மாநிலத்தில் வசிக்கும் ராஜூ என்கின்ற “சமூக ஆர்வலர்” சுபாஸ்கரன். தனது குடும்பத்தின் சகல விசேட தினங்களையும், இவ்வாறான சமூகப் பணியுடனே செய்து வருகின்றனர். அத்தோடு மட்டுமல்ல மற்றவர்களையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு இணைத்து எமது தாயக உறவுகளின் துன்பத்தை குறைக்கும் சமூகப்பணியினை செவ்வனே செய்து வருகின்றார்.

அந்த வகையில் இன்றைய நாளின் தங்களது பேரக் குழந்தைகளான பிரான்ஸ் பாரீசில் வசிக்கும் செல்வி அஞ்சனா, செல்வி ஜானவி ஆகியோரின் பிறந்த நாளில் தாயகத்தில் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தெரிவு செய்து அவர்களுக்கு உலருணவுப் பொதிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக வழங்கி வருகின்றார்..

அதேவேளை செல்வி ஜானவி அவர்களுடைய பிறந்த நாள் கொண்டாட்டம் வவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் என்னும் கிராமத்தில் சிறுவர்களால் கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப் பாடி விமர்சையாக கொண்டாடப்பட்டது. பல சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்டு செல்வி ஜானவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்கள். நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. இதேபோன்று செல்வி அஞ்சனா அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டமும் பிறிதொரு கிராமத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறிப்பிடத்தக்கது.

முல்லை மாவட்டத்தைத் தொடர்ந்து வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் வாழும் வறிய நிலையில் வாழும் மக்களுக்கு நிச்சயமாக அவர்கள் வாழும் இடம் தேடி “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” வழங்கும்.

இதேவேளை மேற்படி நற்காரியங்களுக்கு நிதி உதவி வழங்கிய செல்விகள்.அஞ்சனா, ஜானவி ஆகியோரின் பெற்றோருக்கு தாயக உறவுகள், பயனாளிகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” மனதார நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

அத்துடன் இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் செல்விகளான அஞ்சனா, ஜானவி ஆகியோருக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் “பல்கலையும் கற்று, பேரும் புகழும் சிறக்க வாழ்வாங்கு வாழவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறது”..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

26.07.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.